மும்பை: ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதட்டங்கள் தணிவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில், உலக சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சியைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 1 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 760.8 புள்ளிகள் உயர்ந்து 82,815.91 ஆக இருந்தது. அதே வேளையில், பங்குச் சந்தையில் அதன் முந்தைய நாளின் ஏற்றத்தை நீட்டிக்கும் வகையில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் வர்த்தகத்தின் முடிவில் 700.40 புள்ளிகள் உயர்ந்து 82,755.51 புள்ளிகளாகவும், நிஃப்டி 200.40 புள்ளிகள் உயர்ந்து 25,244.75 ஆக நிலைபெற்றது.
அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து மூலதனத்தைத் திரும்பப் பெறுகையில், உலகளாவிய நேர்மறையான குறிப்புகளால் உள்நாட்டில் பங்குச் சந்தை அதன் வேகத்தைத் வெகுவாக தக்கவைத்தது.
சென்செக்ஸில் டைட்டன், மஹிந்திரா & மஹிந்திரா, இன்ஃபோசிஸ், பவர் கிரிட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை உயர்ந்தும் மறுபுறம் பாரத் எலக்ட்ரானிக்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை சரிந்து முடிந்தன.
நிஃப்டி-யில் டைட்டன் கம்பெனி, இன்ஃபோசிஸ், எம்&எம், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகியவை உயர்ந்து வர்த்தகமான நிலையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஐஷர் மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஓஎன்ஜிசி ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
