மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து மீண்டு, இன்று 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவடைந்தது. இதற்கு ரிசர்வ் வங்கியின் முக்கிய வட்டி விகிதங்கள் ‘நடுநிலை’ நிலைப்பாட்டுடன் இருந்ததே முக்கிய காரணமாகும்.
அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, எதிர்மறையான உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் இந்தியா மீதான அமெரிக்க வரி ஆகியவற்றால் ரூபாயின் லாபம் கட்டுப்படுத்ப்பட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
