Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வாஜ்பாயின் சொந்த கிராமத்தை மீட்டெடுக்கும் அரசு… பொற்காலம் என கூறும் பொதுமக்கள்…!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 30, 2025
in அரசியல் செய்திகள்
0
வாஜ்பாயின் சொந்த கிராமத்தை மீட்டெடுக்கும் அரசு… பொற்காலம் என கூறும் பொதுமக்கள்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


101 சிவன் கோயில்களின் வரிசை

படேஷ்வர், யமுனை நதிக்கரையில் அமைந்த பழங்கால 101 சிவன் கோயில்களால் பிரசித்தி பெற்றது. இவை பிரதிஹாரா வம்ச கால கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டவை என்றும், நாகரா பாணியின் அருமையான எடுத்துக்காட்டுகளாகவும் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தாஜ்மஹால் ஒளிவீசும் ஆக்ராவில், இவை மறைந்திருக்கும் ஆன்மீகத் தளங்களாக இருந்து வந்தன. தற்போது உத்தரப்பிரதேச அரசு, அவற்றை இந்தியாவின் மத சுற்றுலாத் தளத்தில் முக்கிய இடமாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன்வந்துள்ளது.

படித்துறைகளும், புதிய வாயில்களும் – முழுவீச்சில் நடைபெறும் வளர்ச்சி

ரூ.19 கோடி: கோபாலேஷ்வர் கோயிலில் இருந்து நதிக்கரையில் உள்ள கலாச்சார மண்டபம் வரை படித்துறைகள், எளிய அணுகல், விளக்குகள், பார்க்கிங் உள்ளிட்ட அம்சங்களை மேம்படுத்த ரூ.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ.5 கோடி: புதிய நுழைவாயில்கள் – ஒன்று ஃபிரோசாபாத் சாலையிலும், மற்றொன்று ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையிலும் அமைக்கப்பட உள்ளது.

ரூ.1 கோடி: சுற்றுச்சூழல் சுற்றுலா பலகைகள் – சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், அவர்களுக்கு வழிகாட்டும் வகையிலும், இடத்தின் ஆன்மீகம் மற்றும் இயற்கையைப் பற்றி விளக்கவும் சுற்றுலா பலகைகள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.2 கோடி: உள்ளூர் சாலைகள், சுகாதார வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகிய அடிப்படை உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன.

எங்கள் கிராமத்துக்கு பொற்காலம் – பொதுமக்கள் கருத்து

படேஷ்வரின் வளர்ச்சிக்கு உ.பி. அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், தங்களது கிராமத்துக்கு இது பொற்காலம் என மக்கள் இதனை உற்சாகமாக வரவேற்கின்றனர். வாஜ்பாயின் உறவினரான ராஜேந்திர வாஜ்பாய் இது குறித்து கூறுகையில், “அடல்ஜி எப்போதும் படேஷ்வருக்குத் தொடர்பானவர்தான். இப்போதாவது உ.பி.அரசு அவரை நினைவு கூறுகிறதே” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

படேஷ்வரில் பூஜைப்பொருள் விற்பவரான சிவம் திவாரி, “இந்த புதிய வசதிகளால், ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்பதால் உள்ளூர் வளர்ச்சி பெறும்” என்றார். அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியரான மனோரமா மிஸ்ரா, “யமுனையின் இயற்கையும், தூய்மையும் பாதுகாக்கப்படும்” என்று கூறினார். 78 வயதான ஓய்வுபெற்ற பள்ளி முதல்வரான ராம் தயாள் துபே இது பற்றி தெரிவிக்கையில், “நமது 101 கோயில்கள் மற்றும் அடல்ஜியின் மரபின் வெளிச்சத்தில், இது படேஷ்வரின் நேரம் ஆகும்” என்றார்.

சுற்றுலாத் துறையின் வியூகம்

உத்தரப்பிரதேச சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் ஜெய்வீர் சிங் கூறியதாவது, “தாஜ்மஹால் போன்ற உலகப் புகழ்பெற்ற தளங்கள் மட்டுமல்ல, படேஷ்வர் போன்ற இதுவரை நிழலில் இருந்த ஆன்மீக மற்றும் கலாச்சார இடங்களும் இனி வெளிச்சத்துக்கு வர வேண்டிய நேரம் இது. இப்படிப்பட்ட இடங்களின் மதிப்பை உலகிற்கு காண்பிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: திருமணத்திற்கு முந்தைய எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரிசோதனை கட்டாயம்… மேகாலயா அரசு திட்டம்…!

படேஷ்வரை இந்தியா மட்டுமல்ல, உலகளாவிய மத மற்றும் ஆன்மீக சுற்றுலா மையமாக உருவாக்கும் திட்டம்தான் இது என்று கூறிய அமைச்சர் ஜெய்வீர் சிங், அதே நேரத்தில், கன்னோஜ் மற்றும் பிரஜ் போன்ற முக்கிய ஆன்மீகத் தலங்களுடன் இணைந்து, படேஷ்வரும் புதிய சுற்றுலா மண்டலங்களின் ஒரு முக்கிய பகுதியாக சேர்க்கப்பட உள்ளது என்றார். இது வெறும் மாற்றம் மட்டுமல்ல, ஒரு இடத்தின் வளர்ச்சி மற்றும் அடையாளத்தின் மீட்சியாக புத்துயிர் பெறும் என்பதே அப்பகுதி மக்களின் எண்ணமாக உள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 30, 2025 6:04 PM IST



.

Previous Post

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு! வைரல் விடியோ!

Next Post

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது.. திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு இபிஎஸ் ஆறுதலுடன் நிதியுதவி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது.. திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு இபிஎஸ் ஆறுதலுடன் நிதியுதவி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது.. திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு இபிஎஸ் ஆறுதலுடன் நிதியுதவி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In