Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காப்பகத்தில் திடீர் ஆய்வு; நலம் விசாரித்த முதல்வர்… `அப்பா' என‌ அழைத்து நெகிழ வைத்த மாணவர்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 10, 2024
in அரசியல் செய்திகள்
1
காப்பகத்தில் திடீர் ஆய்வு; நலம் விசாரித்த முதல்வர்… `அப்பா' என‌ அழைத்து நெகிழ வைத்த மாணவர்கள்!
23
SHARES
37
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விருதுநகர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்திருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக மாலையில், சூலக்கரை மேடு பகுதியில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு காப்பகம் மற்றும் பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர், கல்வி கற்பதில் அவர்களுக்கு இருக்கும் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டு அறிந்து கொண்டார்.

தொடர்ந்து மாணவ மாணவிகள் ஒவ்வொருவருக்கும் இனிப்புகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்தார். அப்போது பேசிய மாணவி ஒருவர், “மற்றவர்கள் உங்களை சந்திப்பது போல, நாங்கள் எல்லோரும் எங்களை வந்து சந்தித்ததோடு மட்டுமல்லாமல் இனிப்புகள் வாங்கி கொடுத்து பரிசளித்துள்ளீர்கள். இதுமாதிரி பெற்றோர்கள் தான் எங்களுக்கு செய்ததுண்டு. இப்போது நீங்கள் செய்வதை பார்க்கையில் அவர்களை நினைவுபடுத்த தூண்டுகிறது” என்றார்.

காப்பக குழந்தைகளுடன்
பதிவு…

மாணவியின் இந்த நெகிழ்ச்சியான பேச்சையடுத்து சக மாணவர்கள் அனைவரும் அவரை உற்சாகப்படுத்த கைத்தட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து ஆய்வை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கிளம்பும்போது, மாணவ-மாணவிகள் அனைவரும் ஒருமித்த குரலில் ‘Bye அப்பா’ என முதலமைச்சரை கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காப்பகத்தில் நடந்த இந்த தருணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் வலைதளத்தில் ‘அப்பா.. நிறைவான நாள்’ என குறிப்பிட்டு வீடியோவுடன் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

உங்கள் ராசி இன்று எப்படி?

Next Post

ஆ ஆஹா..டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆ ஆஹா..டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்!

ஆ ஆஹா..டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    💚💚💚💚💚💚💚❤️❤️❤️❤️❤️👌👌👹👹👹👹👹👹

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In