சீனாவில் நடைப்பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் வரலாற்றில் முதல் முறையாக 100-க்கும் அதிகமான பதக்கங்களை குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு வித்திட்ட நம் வீரர் – வீராங்கனையருக்கு வாழ்த்துகள்.
குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த 14 வீரர்கள் தனி நபர் மற்றும் குழுப்போட்டிகளில், 7 தங்கம் – 7 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்கள் என 22 பதக்கங்களை வென்று நம் மாநிலத்துக்கு பெருமைத் தேடித் தந்துள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுகள்.
நம் வீரர் – வீராங்கனையரின் இந்த சாதனை ஏராளமான இளைஞர்கள் – இளம்பெண்களை விளையாட்டுத்துறையை நோக்கி நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கச் செய்யும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

