Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கிருஷ்ணகிரி: நிறைவேறிய நம்பிக்கையில்லாத் தீர்மானம் – பறிபோகும் திமுக நகராட்சித் தலைவரின் பதவி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 11, 2025
in அரசியல் செய்திகள்
0
கிருஷ்ணகிரி: நிறைவேறிய நம்பிக்கையில்லாத் தீர்மானம் – பறிபோகும் திமுக நகராட்சித் தலைவரின் பதவி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கிருஷ்ணகிரி நகராட்சி 33 வார்டுகளைக் கொண்டது. இதில், தி.மு.க கவுன்சிலர்கள் 22 பேர். அ.தி.மு.க கவுன்சிலர்கள் 5 பேர். காங்கிரஸ், பா.ஜ.க கவுன்சிலர்கள் தலா ஒருவர். தி.மு.க ஆதரவு சுயேட்சைக் கவுன்சிலர்கள் 4 பேர். நகராட்சித் தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த பரிதா நவாப் என்பவரும், துணைத் தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த சாவித்திரி கடலரசுமூர்த்தி என்பவரும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த மாதம் 16-ம் தேதி, தி.மு.க மற்றும் தி.மு.க ஆதரவு கவுன்சிலர்கள் 23 பேர் கூட்டாகச் சேர்ந்து, “நகராட்சித் தலைவரின் செயல்பாடுகள் நகரமன்றத்துக்கும், அரசுக்கும் எதிராக இருக்கிறது. அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர விரும்புகிறோம்’’ எனக்கூறி, நகராட்சி ஆணையர் சதீஷ்குமாரிடம் புகார் மனு அளித்தனர்.

பரிதா நவாப்

இதையடுத்து, “நகராட்சித் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, சமாதான பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பதற்காக தி.மு.க கவுன்சிலர்கள் 20 பேர் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி நேற்றைய தினம் நகராட்சி அலுவலகத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக, தி.மு.க கவுன்சிலர்கள் 21 பேர், சுயேட்சை கவுன்சிலர்கள் 4 பேர், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் ஆகியோருடன் அ.தி.மு.க கவுன்சிலர் நாகஜோதி என்பவரும் ஆம்னி பேருந்தில் அழைத்துவரப்பட்டிருந்தார்.

அப்போது, அ.தி.மு.க நகரச் செயலாளர் கேசவன் தலைமையில் அந்தக் கட்சியினர் நகராட்சி அலுவலக வாசலுக்கு வந்து, “கவுன்சிலர் நாகஜோதியை தி.மு.க-வினர் கடத்தி வைத்துள்ளார்கள்’’ எனக் கோஷம் எழுப்பி, முற்றுகையிட்டனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது அங்கு வந்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான அசோக்குமார், “எங்கள் கட்சி கவுன்சிலரை வெளியே அனுப்புங்கள்’’ என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீஸார் அவரிடம், “அ.தி.மு.க கவுன்சிலரான நாகஜோதி தனது விருப்பத்தின்பேரில்தான் கலந்துகொண்டிருக்கிறார். அவரை யாரும் கடத்தவுமில்லை; கட்டாயப்படுத்தவுமில்லை’’ எனத் தெரிவித்தனர்.

இதனால், போலீஸாரைக் கண்டித்து எம்.எல்.ஏ தலைமையில் அ.தி.மு.க-வினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 நிமிடங்களுக்குப் பிறகு எம்.எல்.ஏ உட்பட அ.தி.மு.க-வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அ.தி.மு.க கவுன்சிலர் நாகஜோதி

இதைத் தொடர்ந்து, நகராட்சி அலுவலக அறையில் கதவுகள் மூடப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டன. கவுன்சிலர்கள் வாக்குச்சீட்டை அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்தினர். முடிவாக, தலைவர் பரிதா நவாப்புக்கு எதிராக 27 கவுன்சிலர்கள் வாக்குகளைச் செலுத்தியிருந்தனர்.

இதனால், நகராட்சித் தலைவர் பதவியை இழக்கிறார் பரிதா நவாப். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, “இது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்தும், தேர்வு நடைபெறும் நாள் பற்றியும் முறையான அறிவிப்பு வெளியாகும்’’ என்று ஆணையர் சதீஷ்குமார் தெரிவித்திருக்கிறார். இதனால், கிருஷ்ணகிரி நகராட்சியே பரபரப்பாகக் காணப்படுகிறது.



.

Previous Post

Delhi Red Fort Blast | டெல்லி குண்டு வெடிப்பு… காரை ஓட்டியவரின் அடையாளம் தெரிந்தது – போட்டோ வெளியிட்ட போலீஸ்! | இந்தியா

Next Post

இந்தியா உடனான ஒப்பந்தம் மற்றும் இந்தியா மீதான வரி குறைப்பு குறித்து ட்ரம்ப் பேச்சு|Trump gives Green light on India’s Trade deal and Tariff

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியா உடனான ஒப்பந்தம் மற்றும் இந்தியா மீதான வரி குறைப்பு குறித்து ட்ரம்ப் பேச்சு|Trump gives Green light on India’s Trade deal and Tariff

இந்தியா உடனான ஒப்பந்தம் மற்றும் இந்தியா மீதான வரி குறைப்பு குறித்து ட்ரம்ப் பேச்சு|Trump gives Green light on India's Trade deal and Tariff

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In