விபத்தில் சிக்கிய மினி லாரியில் கட்டுக்கட்டாக 7 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டமான விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. நல்லஜார்லா மண்டல் அருகே ஆனந்தபள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மினி லாரி மீது எதிரே வந்த பெரிய லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்து.
இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள் உடனே காயமடைந்த லாரி டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மினி லாரியில் 7 பெரிய பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தன. மேலும் சில ரூபாய் நோட்டுகளும் சாலையில் சிதறி கிடந்தன.
இதனால் சந்தேகமடைந்த ஊர்மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார் மினி லாரியில் 7 பெட்டிகளில் இருந்த பணக்கட்டுகளை மீட்டனர். அவற்றில் இருந்த மொத்த பணத்தையும் கணக்கிட்டபோது 7 கோடி ரூபாய் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்று தெரியவந்தது. எனவே 7 கோடி ரூபாயையும் பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் சிக்கிய மினி லாரியில் 7 கோடி ரூபாய் பறிமுதல் கைப்பற்றப்பட்டிருப்பது ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
.
