Last Updated:
தெலுங்கானாவில் ஒரே மண்டபத்தில் லால் தேவி மற்றும் ஜல்காரி தேவி ஆகிய இரு பெண்களை சூரியதேவ் என்ற நபர் திருமணம் செய்தார்.
தெலுங்கானாவின் கோமரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில், ஒரே மண்டபத்தில் ஒரு நபர் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ள செய்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
லிங்காபூர் மண்டலத்தில் கும்னூர் கிராமத்தில் வசிக்கும் நபர் சூரியதேவ். இவர் லால் தேவி மற்றும் ஜல்காரி தேவி என்ற இருபெண்களை ஒரே நேரத்தில் காதலித்தார்.
இதையடுத்து தாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்கிறோம் என்று தெரிவித்தபோது, முதலில் கிராம பெரியவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இறுதியில் அவர்கள் திருமணத்திற்கு சம்மதித்தனர். இதனையடுத்து அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அதன்படி, இரண்டு பெண்களின் பெயர்களையும் ஒரே திருமண அழைப்பிதழில் அச்சிட்டு, ஒரே மண்டபத்தில், ஒரே முகூர்த்த நாளன்று அவர்களை சூர்யதேவ் பீம் திருமணம் செய்தார். இவர்கள் மூவரும், தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் திருமணம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு, கவனத்தை ஈர்த்து வருகிறது.
Man Marries 2 Women Together In Telangana pic.twitter.com/5vgvNkFdLw
— Indian News Network (@INNChannelNews) March 28, 2025
அந்த வீடியோவில், சூர்யதேவ் பீம், இரண்டு பெண்களுடன் அக்னி குண்டத்தை சுற்றி திருமணச்சடங்கில் ஈடுபடும் காட்சி இடம்பெற்றுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் தெலுங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தில் ஒரு ஆண் ஒரே மண்டபத்தில் இரண்டு பெண்களை மணந்த சம்பவம் நடந்தது. அப்போது கவனத்தை ஈர்த்தது. இந்தியாவில் இந்து சட்டப்படி, ஒரு ஆண் இரண்டு பெண்களை மணப்பது சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
March 29, 2025 10:32 AM IST

