அதேபோல கேரளாவுக்கு ரூ.859 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ. 1,000 கோடி வழங்காமல் உள்ளது மத்திய அரசு. சமக்ரா சிக்ஷா அபிநயான் திட்டத்தின் கீழ் இதை வழங்க வேண்டும். வழங்காமல் இருப்பது நியாயமில்லாதது.
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் இலக்குகளை அடையும் விதமாகவே, பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கு முன்பு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் தொடங்கப்பட்டது.

ஆனால் இப்போது தேசிய கல்விக் கொள்கைக்காக இதனை புறக்கணிக்க முடியாது. நிதிகளை விடுவிப்பதில் தாமதப்படுத்துவதால் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, மாணவர்களின் முன்னேற்றம் தடைப்படுகிறது.
ஆசிரியர்களின் திட்டங்கள், பள்ளி உட்கட்டமைப்பு பரமாரிப்பு போன்றவற்றில் இடையூறு ஏற்படாமல் தடுக்க உடனே நிதியை தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு நிதியை அனுப்ப வேண்டும்” என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.

