திருவாரூர் மாவட்டம் அருகே முத்துப்பேட்டை ,பாலையூர் மேல தெரு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக மேதெருப்பகுதியில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
மழைநீர் தேங்கியுள்ளதால் கொசு தொல்லை மற்றும் விஷ ஜந்துக்கள் வருவதாகவும் மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாய நிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மழைநீர் தண்ணீரை வடியவைப்பதற்கு அருகில் உள்ள வடிகால் வாய்க்காலை தூர்வாரி தர வேண்டும் என்றும் உடனடியாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

