NEET 2024 சர்ச்சை வெடித்த பிறகு, விசாரணை நடத்த ஒரு குழுவை அமைக்க அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமையின் ஆளும் குழுவின் தலைவர் பிரதீப் குமார் ஜோஷி விசாரணைக்கு தலைமை தாங்குவார். இந்த ஆய்வு நீட் 2024 தேர்வில் கருணை மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களின் முடிவுகளை மதிப்பாய்வு செய்யும்.
இருப்பினும், நீட் தேர்வை நடத்தி முறைகேடு செய்த NTA அமைப்பின் தலைவரே இந்த விசாரணை குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் நியாயமான விசாரணையை எதிர்பார்க்க முடியுமா? என்று மாணவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதையே காங்கிரஸ் கட்சியும் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.


கமெண்ட் செய்ய விரும்பவில்லை
கமெண்ட் செய்ய விரும்பவில்லை