Last Updated:
Saudia Airlines Hajj Flight: ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.45 மணிக்கு விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில், சுமார் 250 ஹஜ் பயணிகள் பயணித்துள்ளனர்.
சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தரையிறங்கும்போது தீப்பொறி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். இந்த விபத்து நாட்டையே உலுக்கியது. இதனால், விமானத்தில் பயணிப்பவர்கள் அதிர்ச்சியிலும், பயத்திலும் உள்ளனர்.

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான SV 3112 விமானம் தரையிறங்கியது. ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10.45 மணிக்கு விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில், சுமார் 250 ஹஜ் பயணிகள் பயணித்துள்ளனர்.
लखनऊ एयरपोर्ट पर बड़ा हादसा टला
सऊदी से आए विमान में तकनीकी खराबी
लखनऊ एयरपोर्ट पर लैंडिंग के वक्त खराबी
लैंडिंग के वक्त विमान के पहिए से निकली चिंगारी#Lucknow #lucknowairport #flight pic.twitter.com/ZsXZ3vvK0O
— Diksha singh (@DikshaSingh7522) June 16, 2025
இந்த விமானம் இன்று லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அப்போது, இடது பக்க சக்கரம் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து விமானத்தை உடனடியாக விமானி நிறுத்தியுள்ளார். மேலும், இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த 250 ஹஜ் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
June 16, 2025 11:42 AM IST
அடுத்த அதிர்ச்சி.. ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் தீ.. லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு!

