11 மாதம் நான் பணி செய்து வருகிறேன். ஆனால் இதுவரை என்னைப் பற்றி யாரும் புகார் அளிக்கவில்லை. நாமக்கல்லில் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கை விசாரணை செய்ததில் நானும் ஒருவன். அடுத்து விஜயகுமார் ஐபிஎஸ் இறந்தார். அவரிடம் நான் வேலை செய்ததில்லை ஆனால் அவர் தங்கம். தமிழக முதலமைச்சர் ஏன் இன்னும் எனது பிரச்சனையில் தலையிடவில்லை என எனக்கு தெரியவில்லை. தமிழக டிஜிபி ஏன் என்னை அழைத்து இன்னும் விசாரிக்கவில்லை எனவும் தெரியவில்லை. நான் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன்.

எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். சில பேரின் சுயநலத்தால் தான் எங்களை போன்ற அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையானது நான் காவல்துறையில் பணியாற்ற கூடாது. எனக்கும் சட்டம் தெரியும். தற்போது நான் பேசுவதால் என்ன விளைவுகள் வரும் என்பதும் தெரியும். என் மீது சாணியை வாரி அடிக்கிறார்கள். எனது தந்தை உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார். அப்போதும் நான் இங்கு நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கிறேன். என் மீது தவறு இருந்தால் தூக்கில் போடவும். காவல்துறையில் ஸ்டார் முக்கியமில்லை. மன நிம்மதி மட்டுமே முக்கியம்.
எனது குடும்பத்திற்கு யார் பாதுகாப்பு. நான் இறந்து விட்டால் மலர் வளையம் வைத்து கண்ணீர் சிந்தி விட்டு சென்று விடுவீர்கள். நான் கடைசிவரை பிரச்னைகளை சந்திப்பேன். மற்ற காவலர்களை போன்று எவ்வித தவறான முடிவும் எடுக்க மாட்டேன்.
டிஜிபி சங்கர் ஜிவால் நல்ல அதிகாரி. ஆனால் தற்போது வரை என்னை கூப்பிட்டு விசாரிக்கவில்லை. மீண்டும் பதிவு செய்கிறேன். எனது உயிருக்கு உத்திரவாதம் இல்லை. தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக எனது பிரச்னையில் தலையிட்டு விசாரிக்க வேண்டும். தமிழக முதல்வர் இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு நேரடியாக தலையிட வேண்டும்” என்றார்.
