மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் இன்று அட்டாரி – வாகா எல்லையில் நாட்டின் சுதந்திர நாளையொட்டி, இந்திய ராணுவ வீரர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
இந்திய வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்து ஆரவாரம் செய்ததுடன், ராணுவத்தினரை உற்சாகப்படுத்தும் விதமாக “வந்தே மாதரம்..” என தேசபக்தி முழக்கங்களுடன் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சி அடைந்தனர்.
எல்லைப் பாதுகாப்புப் படையினர், இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து அங்கு குழுமியிருந்தவர்களை உற்சாகமடைய வைத்தனர்.
கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாட்டின் முப்படையை சேர்ந்த வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண அரசு உயர் அதிகாரிகளுடன், பொதுமக்களும் பெருமளவில் வருகை தந்தனர். இதனை கண்டுகளித்த பொது மக்கள் வீரர்களுக்கு கைதட்டி உற்சாகமூட்டினர்.
