ஜாம்ஷெட்பூர்: நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார், 25 நிரந்தர ஊழியர்கள் கூட இல்லாத தேசிய தேர்வு முகமை, ஆண்டுக்கு இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்துகிறது என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஒடிசா, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமார், இதுபோன்ற தேர்வுகளை தேசிய தேர்வு முகமையை நடத்தச் சொல்லி, மத்திய அரசு சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும் கூறியிருக்கிறார்.
தேசிய தேர்வு முகமை, பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களைக் கொண்டு செயல்படுகிறது. உள்துறையில் பணியாற்ற நிபுணத்துவம் பெற்ற ஊழியர்கள் இன்மை, வினாத்தாள் வடிவமைப்பு, வினாத்தாள் விநியோகம், தேர்வு மைய பாதுகாப்பு உள்ளிட்டப் பணிகளை வெளி ஒப்பந்தத்துக்கு விடுவதன் மூலமே நடத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
