2018-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4 ஆயிரத்து 800 கோடிக்கு முறைகேடு செய்ததாக எபப்பாடி பழனிசாமி மீது புகார் எழுந்தது.
இந்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க கோரி தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அப்போது உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி மீண்டும் கடந்த வாரம் வழக்கு உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக வழக்கை திரும்பப் பெறுவதாக கூறினார் ஆர்.எஸ்.பாரதி.
இன்று எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் புதிய மனு கொடுக்கலாம் என ஆர்.எஸ்.பாரதிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

