இதன் இடையே முதல்வர் கலைஞர் அவர்களை இரண்டு மூன்று முறை சந்தித்து பிழைகளை திருத்தி நான்காம் முறை அவரை சந்திக்கிறேன். என்னுடன் ஏதோ ரொம்ப நாள்கள் பழகியவர் போலவே பேசினார் “பேனர் தம்பி” என்னும் அடை மொழியிலேயே என்னை அழைத்தார்.,பிரம்பிப்புடன் நான்காம் முறை அவரை சந்தித்தேன்..
அறிவாலயத்தில் முதல்வர் கலைஞர்., முரசொலிமாறன்., ஆற்காடு வீராசாமி ஆகியோர் இருந்தனர்.
பேனர் எண்ணிக்கையும்.. விலையும் பேசி முடிக்க அரை மணி நேரமானது., இடையில் உப்பு கடலை வர எனக்கும் அவரின் கையாலேயே கொடுத்தார்.
அய்யா பத்து ரூபாய் அட்வான்ஸ் கொடுங்கள் என்றேன்.. அவர் சிரித்தபடி ஆற்காடு பேனர் தம்பிக்கு பத்து ரூபாயை கொடு என்றார்.
தமாஷாக கோயம்புத்தூர் காரங்களுக்கு குசும்பு பாரு பத்து லட்சத்தை பத்து ரூபாய் என்கிறார். சரி ஏழு ரூபாய் வாங்கிக்க என்றார் முதல்வர் கலைஞர்.(ஏழு லட்சம்)
அது முப்பது லட்சம் ரூபாய் ஆர்டர் சரியான முறையில் செய்து டெலிவரி கொடுத்து முழு பணத்தையும் பெற்றுக் கொண்டேன் குறைந்த லாபமென்றாலும் கலைஞரிடம் நேராக பேசும் சந்தர்ப்பம் அமைந்ததால் அது பொருட்டாக பட வில்லை..
அதன் பின்னரும் கலைஞரை பல முறை சந்திக்க நேர்ந்தது..
2001 ம் ஆண்டு முதல் தேதி கன்னியாகுமரியில் அதே பேனரை என் சொந்த முயற்சியில் 200 பேனர்களை மட்டும் செய்து கொடுத்தேன்..
தேர்தல் வாசகத்தை அழித்து விட்டு,
“இதனை இதனால் இவன் முடிக்கும்
என்றாய்ந்து அதனை அவன்கண்விடல்”
என்னும் திருக்குறளை பதித்து செய்ததில் எனக்கு மனநிறைவே..
கன்னியாகுமரியில் அவர் அந்த பேனரை பார்த்துவிட்டு பின்னர்
“இதனை இதனால் இவன் முடிக்கும்.,
என்றாய்ந்து அதனை அவன்கண்விடல்” – என்று என்னை சுட்டி காண்பித்து சொன்னது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்.
ஒரு எளிமையான முதல்வரை சந்தித்தது எனக்கும் நிறைவே..
நன்றி.
அன்புடன்.,
– சுதா மோகன்…
