Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கேரள அங்கன்வாடியில் இனி உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி…! சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 4, 2025
in அரசியல் செய்திகள்
0
கேரள அங்கன்வாடியில் இனி உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி…! சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அந்தச் சிறுவனின் எளிய வேண்டுகோளுக்கு இணங்க, தற்போது கேரளா முழுவதும் உள்ள குழந்தை பராமரிப்பு மையங்களில் உணவு மெனுவை அரசு மாற்றியமைத்து, குழந்தைகளுக்குப் பல்வேறு வகையான சுவையான மற்றும் சத்தான உணவுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய மெனுவில், முட்டை பிரியாணி, புலாவ், பருப்பு பாயாசம், சோயா உலர் கறி மற்றும் ஊட்டச்சத்து மிக்க லட்டு போன்ற உணவுகள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் புதிய உணவுகள் நீண்டகாலமாக இருந்துவரும் அடிப்படையான உணவு வகைகளை மாற்றி, ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும், சிறந்த ஊட்டச்சத்தையும் கொண்டுவரும். அங்கன்வாடி குழந்தைகளுக்கான திருத்தப்பட்ட மெனுவை வெளியிட்ட அமைச்சர் ஜார்ஜ், அரசு நடத்தும் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு ஒருங்கிணைந்த மெனு செயல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்றார்.

புதிய மெனுவில் அதிக சுவையான, மாறுபட்ட மற்றும் சத்தான உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், சர்க்கரை மற்றும் உப்பு உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, புரதம் நிறைந்த உணவுகளை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றும் ஜார்ஜ், அங்கு நடைபெற்ற மாநில அளவிலான அங்கன்வாடிகள் திறப்பு விழாவின்போது, இந்த மாற்றங்களை அறிவித்தார். திருத்தப்பட்ட மெனுவில் காலை உணவு, மதிய உணவு மற்றும் துணை ஊட்டச்சத்துக்களும் அடங்கும்.

குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட நாட்களில் கோதுமை துருவல் புலாவ், ரைத்தா, கொண்டைக்கடலை கறி போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுடன், கொழுக்கட்டை மற்றும் இலையாடா போன்ற பாரம்பரிய சிற்றுண்டிகளும் வழங்கப்படும். முன்னர் வாரத்திற்கு இரண்டு முறை வழங்கப்பட்ட பால் மற்றும் முட்டைகள், இப்போது வாரத்திற்கு மூன்று முறை வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். புதிய மெனுவில் ஒவ்வொரு உணவிற்கும் தேவையான பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்புகள் பற்றிய விவரங்களும் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரியில், ஆலப்புழாவைச் சேர்ந்த ஷங்கு என்ற சிறுவன் தனது அங்கன்வாடியில் உப்புமாவிற்குப் பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மெனுவை விரைவில் மாற்றியமைப்பதாக அந்தச் சிறுவனுக்கு ஜார்ஜ் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவில், தொப்பி அணிந்திருந்த குழந்தை தனது தாயிடம் இனிமையான குரலில், “எனக்கு அங்கன்வாடியில் உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணி மற்றும் ‘பொரிச்ச கோழி’ (சிக்கன் ஃப்ரை) வேண்டும்” என்று கேட்கிறான். அவன் வீட்டில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இந்த வீடியோவைப் பதிவுசெய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதாக சிறுவனின் தாயார் விளக்கம் கொடுத்தார்.

சிறுவனின் கோரிக்கையை நெட்டிசன்கள் பலரும் ஆதரித்தனர். சிலர் சிறைகளில் உள்ள குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் உணவைக் குறைத்தாவது, அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்குச் சிறந்த உணவு வழங்கப்பட வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரைத்தனர். அமைச்சரின் உடனடி நடவடிக்கைக்குப் பதிலளித்த ஷங்கு, தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினான்.

First Published :

June 04, 2025 3:14 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கேரள அங்கன்வாடியில் இனி உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி…! சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்…



.

Previous Post

உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கர்ப்பமாக முடியாதா?

Next Post

ஐபிஓ வெளியீட்டு விலைக்கு இணையாக ஸ்கோடா டியூப்ஸ் பங்குகள் பட்டியல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஐபிஓ வெளியீட்டு விலைக்கு இணையாக ஸ்கோடா டியூப்ஸ் பங்குகள் பட்டியல்!

ஐபிஓ வெளியீட்டு விலைக்கு இணையாக ஸ்கோடா டியூப்ஸ் பங்குகள் பட்டியல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In