இதனைக் கவனித்த போக்குவரத்துக் காவலர் முருகன், அவரை துரத்திச் சென்றிருக்கிறார். அப்போது சாலையின் ஒரு தடுப்பில் மோதி, அந்த வாகனத்தில் வேகம் குறைந்து இருக்கிறது. அப்போது அதனைப் பிடிக்க முயன்ற போக்குவரத்துக் காவலர் முருகன், அந்த லாரியில் ஏறி, கடத்திய நபரை எச்சரித்தார். ஆனால், கடத்தல்காரர், போலீஸின் எச்சரிக்கையை காதில் வாங்காமல், லாரியைச் செலுத்தினார். இதில் போக்குவரத்துக் காவலர் முருகன் 10 கி.மீ.தூரம் தொங்கியபடி பயணிக்கும் சூழல் ஏற்பட்டது.
