Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பழங்குடிகளின் வாழ்வும் வலியும்… தண்டகாரண்யம் – திரை விமர்சனம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 19, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பழங்குடிகளின் வாழ்வும் வலியும்… தண்டகாரண்யம் – திரை விமர்சனம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கிய தண்டகாரண்யம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தண்டகாரண்யம் என்பது ராமாயணத்தில் ராமரும், லட்சுமணனும் அலைந்த காடுகளையே குறிக்கிறது. அடர்ந்த காடுகளான இவை இன்றைய கிழக்குத் தொடர்ச்சி மலையிலிருந்து ஜார்க்ண்ட் வரை பல மாநிலங்களில் உள்ளது. எப்படி, ராமாயணத்தில் ராமரும் லட்சுமணனும் காட்டிற்குள் சிக்கல்களைச் சந்தித்தனரோ அதேபோல் இந்த தண்டாகாரண்யத்தில் அண்ணன் தினேஷ், தம்பி கலையரசன் சந்திக்கும் இடர்களும் துயர்களுமே இப்படத்தின் கதை.

கிருஷ்ணகிரி மலைப்பகுதி ஒன்றில் நடிகர் தினேஷின் குடும்பம் வசித்து வருகிறது. இவரது தம்பி கலையரசன் வனத்துறையில் பணியாற்றி வருகிறார். அதிகாரத்திற்கு எதிரான தினேஷின் குரலால், கலையரசனுக்கு வேலை போகிறது. தொடர்ந்து, தன் தம்பியின் வாழ்க்கைக்காக நிலத்தை விற்று ராணுவத்தில் சேர்க்கலாம் என்கிற ஆசையில் கலையரசனை ஜார்கண்டிலுள்ள பயிற்சி முகாம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கிறார். அந்தக் காட்டில் கலையரசனும் இந்தக் காட்டில் தினேஷும் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம் மூலம் உழைப்பவர்களின் வலியையும் அரசியலையும் பதிவு செய்த இயக்குநர் அதியன் ஆதிரை, தண்டகாரண்யத்தில் முக்கியமான விஷயமொன்றைப் இருவேறு கோணங்களில் அலசியிருக்கிறார். பழங்குடிகள் சந்திக்கும் அதிகார அடக்குமுறைகளும் அதிகாரத்திற்கு எதிராக எழும் சக்திகளையும் ஒன்றொன்று தொடர்புப்படுத்தி தினேஷையும் கலையரசனையும் இருவேறு துருவங்களில் நிற்க வைத்து வாழ்வையும் வலியையும் கதாபாத்திரங்கள் வழியே கடத்தியிருக்கிறார்.



.

Previous Post

6000 Votes – Rahul பகீர் குற்றச்சாட்டு – IP Address OTP விவரங்களை தர மறுக்கும் ECI | Imperfect Show

Next Post

இந்தியாவுக்கு எதிராக சௌதி அரேபியா போரில் இறங்குமா? – பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் எப்படி செயல்படும்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவுக்கு எதிராக சௌதி அரேபியா போரில் இறங்குமா? – பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் எப்படி செயல்படும்?

இந்தியாவுக்கு எதிராக சௌதி அரேபியா போரில் இறங்குமா? - பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் எப்படி செயல்படும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In