Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்த விவகாரம்.. தூய்மைப் பணியாளர்கள் கைப்பற்றிய ரூபாய் நோட்டுகள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 25, 2025
in அரசியல் செய்திகள்
0
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்த விவகாரம்.. தூய்மைப் பணியாளர்கள் கைப்பற்றிய ரூபாய் நோட்டுகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 24, 2025 10:56 AM IST

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணை நடைபெற்று, நீதிபதிக்கு பணிகள் ஒதுக்க வேண்டாம் என உத்தரிக்கப்பட்டது.

News18News18
News18

டெல்லியில் உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்த புகாரில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நீதிபதி வீட்டின் அருகே குப்பையில் பாதி எரிந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுகளை தூய்மைப் பணியாளர்கள் கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ள டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டின் அருகே குப்பையில் பாதி எரிந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அரசு இல்லத்தில் கடந்த 14 ஆம் தேதி இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்த போது, நீதிபதி வீட்டில் பொருட்கள் வைக்கும் ஸ்டோர் ரூமில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார்.

அதன்படி, விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கை அளித்தார். மேலும், நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் கிடந்த ரூபாய் நோட்டுகள் தொடர்பாக டெல்லி காவல்துறை வழங்கிய வீடியோவும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவற்றை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. இதன்மூலம் நீதிபதியின் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனவும் தன்னை சிக்க வைக்க சதி நடப்பதாகவும் நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கமளித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நியமித்துள்ளார். விசாரணை முடியும் வரை, யஷ்வந்த் வர்மாவுக்கு எந்த பணியும் ஒதுக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா வீடு அருகே குப்பையில் எரிந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுகளை கண்டெடுத்ததாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு, ஐந்து நாட்களுக்கு முன்பு தூய்மைப் பணியின் போது எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகளை கண்டறிந்ததாகவும், அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் சில நோட்டுகள் சிக்கியதாகவும் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவற்றை கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Also Read | ஓப்பனிங் இல்லாமல் நம்பர் 3ல் இறங்கியது ஏன்? – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சொன்ன காரணம்!

டெல்லியில் துக்ளக் சாலையில் உள்ள காவல்நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அரசு இல்லம் அமைந்துள்ளது. உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ள அவரது வீட்டின் அருகே குப்பையில் எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் மீட்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் செல்போன் அழைப்பு விவரம், இணையதள பயன்பாடு குறித்த விவரங்களை வழங்கும்படி டெல்லி காவல்துறைக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உபத்யாயா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆறு மாதங்களாக யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பணியாற்றிய மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகளின் விவரங்களை வழங்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் செல்போனில் உள்ள ஆவணங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அழித்துவிட வேண்டாம் என்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உபத்யாயா அறிவுறுத்தியுள்ளார்.

Location :

Delhi,Delhi,Delhi

First Published :

March 24, 2025 10:56 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்த விவகாரம்.. தூய்மைப் பணியாளர்கள் கைப்பற்றிய ரூபாய் நோட்டுகள்!



.

Previous Post

‘தனியார் பள்ளிகளுக்கு அனுமதி இல்லை.. அரசு பள்ளிகள் பிஎம் ஸ்ரீ பள்ளிகளாகும்’ அண்ணாமலை பேச்சு!

Next Post

Trichy Weather 24 March 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.23°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Trichy Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.98°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Trichy Weather 24 March 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.23°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In