நெல்லை – திசையன்விளை காவல் நிலையம் :- 17 வயது சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தி சென்று தொடர்ந்து மூன்று நாள் பாலியல் பலாத்காரம் செய்தவரிடம் இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் உதவி ஆய்வாளர் உதயலட்சுமி ஆகியோர் பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு POCSO-ல் வழக்குப் பதியாமல் காமக்கொடூரனை காப்பாற்றிய சம்பவம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நமது செய்தி களஆய்வு குழு இறங்கி விசாரித்த நிலையில்.. நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் கூலி தொழிலாளி செந்தில்வேல் செப்டம்பர் மூன்றாம் தேதி தனது 17 வயதுடைய மகள் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். அப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து (எஃப் ஐ ஆர் 385) விசாரணை நடத்தி வந்தனர். இதில் அயன்குளம் ஊரைச் சேர்ந்த ஜெயசீலன் டிரைவர் என்பவர் சிறுமியை கடத்தி சென்றிருப்பது தெரியவந்துள்ளது. சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தி உறவினர் மூலம் அழைத்துச் சென்றது தெரிய வந்ததை அறிந்த இன்ஸ்பெக்டர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆளை அனுப்பி அவர்களை கடந்த ஆறாம் தேதி இன்ஸ்பெக்டருக்கு வேண்டப்பட்ட வழக்கறிஞர் மூலம் காவல் நிலையத்திற்கு வரவழைத்ததாக தெரிய வருகிறது.
அந்த வழக்கறிஞர் மூலம் பணத்தை பெற்ற இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, எஸ்எஸ்ஐ, ஏட்டு, ரைட்டர் அவர்களுடைய தகுதிக்கு ஏற்றவாறு பணத்தை பங்கு போட்டுக்கொண்டு சிறுமியை கடத்திய ஜெயசீலனை மாப்பிள்ளை போல் வழி அனுப்பி வைத்துவிட்டனர்.

இன்ஸ்பெக்டரும், வழக்கறிஞரும் பாதிக்கப்பட்ட சிறுமியை மூளை சலவை செய்து மிரட்டி தவறான வாக்குமூலம் பெற்றுக்கொண்டு முகாமுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். உதவி ஆய்வாளர் உதயலட்சுமி பெற்றோரிடம் மிரட்டும் தோரணையில் பேசி உள்ளாராம். “”இந்தப் பிரச்சனை சம்பவம் வெளியில் தெரிய கூடாது, தெரிந்தால் உன் மகளை யாரும் திருமணம் செய்ய மாட்டாங்க, மீடியாவுக்கு செய்தி தெரிஞ்சா உங்க பொண்ணு போட்டோவை போட்டு அசிங்க படுத்துடுவாங்க, உங்க பொண்ண முகாமுக்கு அனுப்புறேன், உடம்பு சரியான பிறகு நாங்களே தகவல் கொடுப்போம், வந்து அழைச்சிட்டு போங்க, இப்ப கையெழுத்து போடுங்க”” என்று ஏற்கனவே எழுதி வைத்திருந்த மூன்று நான்கு பேப்பரில் கையெழுத்து போட சொன்னார்களாம்.
சிறுமியிடம் விசாரித்தபோது, “”உன்னை யாரும் திருமணம் செய்ய மாட்டாங்க, நீ கர்ப்பமா இருக்குறனு வெளியில சொல்லுவாங்க, நானே போனேன், என்னை யாரும் கூட்டிட்டு போகல, மீண்டும் நானே வந்துட்டேன், என்று மட்டும் தான் சொல்லணும் இல்லைனா பிரச்சினை பெருசாகும்”” என்று சொல்ல சொன்னாங்க. அதனால நான் பயந்துக்கொண்டு அம்மாவிடம் அழுதேன் என்றாள் அந்த சிறுமி.
ஜெயசீலனின் உறவினர் பேச்சுமுத்துவிடம் விசாரித்தபோது, இன்ஸ்பெக்டர் 1 லட்சம் கொடு..!, இல்லனா POCSO-ல் உள்ளே தள்ளிவிடுவேன் என மிரட்டியதால் நான் அந்த சிறுமியிடம் இருந்த செயின் மற்றும் மோதிரத்தை வாங்கி அடகு வைத்து வழக்கறிஞர் மூலம் இன்ஸ்பெக்டரிடம் ரூபாய் 87,000 கொடுத்துவிட்டேன். இன்ஸ்பெக்டர் தான் கேரளாவிற்க்கு ஓடிப்போடா என்று சொன்னதால் அவன் கேரளாவிற்கு ஓடி விட்டான் என்றார்.
உதவிஆய்வாளர் உதயலட்சுமியிடம் விசாரித்தபோது, இன்ஸ்பெக்டர் என்ன சொல்கிறாரோ அதைதான் நான் செய்வேன். சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் அழுதது உண்மைதான். நான் ஒன்றும் செய்யமுடியாது, எதுவாக இருந்தாலும் இன்ஸ்பெக்டரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்.
ஆய்வாளரிடம் விசாரித்தபோது, மகள் காணவில்லை என்று புகார் அளித்தார்கள். கண்டுபிடித்து கொடுத்துவிட்டோம், இதெல்லாம் பெருசு படுத்தாதீங்க சார், போங்க சார்.. என்று கூறிவிட்டார்.
17 வயது சிறுமியை 3 நாள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரனிடம் பணத்தை பெற்றுக்கொண்டு காப்பாற்றிய இன்ஸ்பெக்டரை என்னவென்று சொல்வது? காவல் நிலையத்தில் தாய் கதறியும் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டரை இடமாறுதல் செய்ய வேண்டும். ஒரு பெண்ணான பெண் எஸ்.ஐ. சிறுமிக்கு உதவாமல் பணத்திற்காக சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் எஸ்.ஐ யை இடம் மாறுதல் செய்ய வேண்டும். மேலும் சிறுமியை பாலியல் பலாத்தகாரம் செய்த ஜெயசீலனை POCSO-ல் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தங்க நகைகளை மீட்டுதரவேண்டும் என்று அச்சிறுமியின் குடும்பம் கேட்கிறது.
இது போன்று பணத்திற்காக சட்டத்திற்கு புறம்பாக நடந்துகொள்ளும் ஒரு சில காவல் அதிகாரிகளால் தான் ஒட்டு மொத்த காவல் துறைக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா?


பணத்திற்காக ஒரு சில காவல் அதிகாரிகள் இது போன்று நடந்து கொள்வதாக சொல்லி இருக்கிறீர்கள் ஒரு சில அதிகாரிகள் அல்ல நிறைய அதிகாரிகள் இப்படித்தான் இருக்கிறார்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லையில் அன்னக்கிளி அம்மாள் என்கிற மூதாட்டி பக்கத்து வீட்டு நபரால் படுகொலை செய்யப்பட்டார் அப்போதைய எச்சை சோமசுந்தரம் சாரி எஸ் ஐ சோமசுந்தரம் இயற்கை மரணம் என்று வழக்கை முடித்து விட்டார் எவ்வளவோ போராடியும் நீதி கிடைக்காததால் அன்னக்கிளி அம்மாளின் மகன் செல்வம் என்கிற செல்வராஜ் பழிக்கு பழியாக 2017 அந்த நபரை வெட்டி வீழ்த்தினார்அதே காவல் நிலையத்தில் 1998இல் எச்சையாக சாரி எஸ் ஜ ஆக இருந்த சோமசுந்தரம 2017 இன்ஸ்பெக்டர் ஆக இருந்தார் சோமசுந்தரத்தை பற்றி தெரிந்த செல்வம் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து வழக்கிலிருந்து விடுதலை ஆகிவிட்டார் காவல்துறையில் இதெல்லாம் சர்வ சாதாரணம்