Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கர்ப்பிணி மனைவியை நடு ரோட்டில் கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு தாக்கிய கணவன்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 8, 2025
in அரசியல் செய்திகள்
0
கர்ப்பிணி மனைவியை நடு ரோட்டில் கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு தாக்கிய கணவன்..!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தெலங்கானா மாநிலம் விகாராபாத்தைச் சேர்ந்தவர் 32 வயதான முகமது பஸ்ரத். வீட்டு டெக்கரேஷன் வேலை செய்து வந்தவர். கடந்த 2023 ஆம் ஆண்டு அஜ்மீர் தர்காவிற்கு சென்றுள்ளார். அப்போது, பேருந்து பயணத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 22 வயதான ஷபானா பர்வீன் என்பவரை சந்தித்துள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள ஆதித்யா நகரில் பஸ்ரத் மற்றும் அவரது மனைவி, பஸ்ரத்தின் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். ஆனால், குடும்பச் சண்டை காரணமாக இளம் தம்பதி தனிக்குடித்தனம் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், இரண்டு மாத கர்ப்பிணியான ஷபானாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், கொண்டாபூரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மூன்று நாட்களுக்குப் பிறகு ஷபானா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வெளியே வந்த இருவரும், மருத்துவமனை எதிரிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பஸ்ரத், தனது மனைவி கர்ப்பிணி என்றும் பாராமல் அவரின் வயிற்றில், ஓடி வந்து எட்டி உதைத்துள்ளார். இதில், வலி தாங்க முடியாமல் நடு ரோட்டில் சுருண்டு விழுந்துள்ளார். அப்படியும், ஆத்திரம் தீராத கணவன், மிருகமாக மாறி சிமெண்ட் செங்கல்லை எடுத்து ஷாபானாவின் மார்பிலும், தலையிலும் மாறி மாறி போட்டு தாக்கியுள்ளார்.

இதையும் படிக்க: உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்கள் என்னென்ன..?

அரக்கன் போன்று நடந்து கொண்டவரை, அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தும் பார்க்காமலும் கடந்து போயினர். 10-க்கும் மேற்பட்ட முறை கல்லால் கொடூரமாக தாக்கியதில் குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்த மனைவி, இறந்து விட்டதாக நினைத்து பஸ்ரத் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த கச்சிபௌலி போலீசார், உயிருக்கு போராடிய கர்ப்பிணியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த காயமடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பெண் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் முகமது பஸ்ரத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐதராபாத்தில் நடு ரோட்டில் கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்து, மார்பிலும், தலையிலும் மாறி மாறி கல்லைப் போட்டு காதல் கணவனே கொடூரமாக தாக்கிய சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.

Location :

Hyderabad,Telangana

First Published :

April 08, 2025 12:51 PM IST



.

Previous Post

‘யார் நலனுக்காக உச்சநீதிமன்றம் போனீர்கள்?’ தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

Next Post

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In