Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

லிப்ட் கொடுத்து அழைத்துச் சென்ற நபர்.. நடுக்காட்டில் ரத்த வெள்ளத்தில் அரங்கேறிய திகில் சம்பவம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 13, 2025
in அரசியல் செய்திகள்
0
லிப்ட் கொடுத்து அழைத்துச் சென்ற நபர்.. நடுக்காட்டில் ரத்த வெள்ளத்தில் அரங்கேறிய திகில் சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 13, 2025 9:14 AM IST

பிரபாகர் லிப்ட் கேட்கவில்லை. அவ்வழியாக பைக்கில் வந்த ஆனந்த் என்பவர் வழிமறித்து அவருக்கு லிப்ட் கொடுத்துள்ளார். போகும் வழியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பைக்கை நிறுத்திய ஆனந்த் பெட்ரோல் தீர்ந்துவிட்டதாகக் கூறி நேரத்தைக் கடத்தி உள்ளார்.

Crime KarnatakaCrime Karnataka
Crime Karnataka

கர்நாடகாவில் புதையல் ஆசையில் செருப்பு தைப்பவரை நரபலி கொடுத்த சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது. நரபலி கொடுத்தவரையும், கொடுத்தால் புதையல் கிடைக்கும் என ஏற்றிவிட்ட சாமியாரையும் கைது செய்து விசாரித்ததில் தெரியவந்த திகிலூட்டும் சம்பவத்தின் பின்னணி என்ன?

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் பரசுராம்புராவைச் சேர்ந்தவர் பிரபாகர். செருப்பு தைக்கும் தொழிலாளியான இவர், கடந்த இரு தினங்களுக்கு முன் காணாமல் போனார். ஊர் முழுக்கத் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அப்போதுதான் பரசுராம்புரா கிராமத்தின் ஒதுக்குப்புறமான பொட்டல் காட்டில் பிரபாகர் சடலமாகக் கிடந்துள்ளார் என்ற தகவல் கிடைத்தது. கொடூரமான ஆயுதத்தால் அறுத்து உடலில் இருந்து அதிகப்படியான ரத்தத்தை வெளியேற்றி அவரை யாரோ கொலை செய்து வீசியுள்ளனர். உடல் கிடந்த இடத்தில் பேரதிர்ச்சியாக, மற்றொரு சம்பவமும் அரங்கேறியது. மண்ணில் அமானுஷ்ய மாந்திரீக மந்திரக் கட்டம் போட்டு பூஜை செய்ததற்கான அடையாளமும் தென்பட்டது. அதனருகே மனித ரத்த வாடையும் வீசியது. ஆம் நரபலிதான்! பிரபாகரின் உயிரை காவு வாங்கி நரபலி கொடுத்துள்ளனர்.

இப்பகீர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்து அங்கு வந்து சேர்ந்தனர். கூலித்தொழிலாளியை நரபலி கொடுத்தது யார்? அக்கொடூர செயலின் பின்னணி என்ன? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அதில் நரபலி சம்பவத்தின் பகீர் பின்னணி குறித்து பல திடுக்கிடும் சம்பவங்கள் வெட்டவெளிச்சமானது. தினமும் வேலை முடிந்து நடந்தே வீடு வரை செல்லும் பிரபாகர் இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டு ஏறிச் செல்வது வழக்கம். சம்பவத்தன்று அதேதான் நிகழ்ந்தது.

ஆனால் பிரபாகர் லிப்ட் கேட்கவில்லை. அவ்வழியாக பைக்கில் வந்த ஆனந்த் என்பவர் வழிமறித்து அவருக்கு லிப்ட் கொடுத்துள்ளார். போகும் வழியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பைக்கை நிறுத்திய ஆனந்த் பெட்ரோல் தீர்ந்துவிட்டதாகக் கூறி நேரத்தைக் கடத்தி உள்ளார். பேச்சுக் கொடுத்துக்கொண்டே பொட்டல் காட்டின் நடுப்பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றவர் திடீரென்று ஆக்ரோஷ செயலில் ஈடுபட்டார். மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபாகரின் கழுத்து, கை மணிக்கட்டு என சரமாரியாக வெட்டி சுயநினைவை இழக்க வைத்துள்ளார்.

ரத்தம் சொட்டச் சொட்ட உயிருக்குப் போராடிய பிரபாகர் மண்ணில் சரிய, அதனருகே ஆனந்த் தனது அனுமாஷிய மூட நம்பிக்கையை அரங்கேற்றம் செய்துள்ளார். மாந்திரீக மந்திரக் கட்டங்களை மண்ணில் வரைந்து ஏற்கனவே திட்டமிட்டு எடுத்து வந்திருந்த குங்குமம், மஞ்சள், எலுமிச்சை உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்துள்ளார். பிரபாகரின் உடலில் இருந்து உயிர் பிரியும் வரை நரபலி கொடுப்பதாக நினைத்து ஆனந்த் பூஜை செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர் துடிதுடித்து உயிரிழந்ததைக் கண்டு ஆனந்த் அங்கிருந்து தப்பிச் சென்றார். இக்கொடூர சம்பவம் வெளியில் தெரியவர ஊர்க்காரர்கள் கொடுத்த அடையாளங்களை வைத்து தலைமறைவாக இருந்த ஆனந்த் ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.

Also Read | தவெக நிர்வாகி கொடுத்த காதல் தொல்லை.. 8ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. செஞ்சியில் சோகம்!

ஆண் ஒருவரை நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என ஆனந்தை கொடூர புத்திக்குள் இழுத்து விட்ட ஜோதிடரையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் வேறு யாரையாவது நரபலி கொடுத்தார்களா? அல்லது நரபலி கொடுக்க முயன்றார்களா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் முடிவில் மேலும் பல மர்மங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண் ஒருவரை நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்று மந்திரவாதி கூறியதைக் கேட்டு அப்பாவி நபர் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

First Published :

February 13, 2025 9:14 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

லிப்ட் கொடுத்து அழைத்துச் சென்ற நபர்.. நடுக்காட்டில் ரத்த வெள்ளத்தில் அரங்கேறிய திகில் சம்பவம்!



.

Previous Post

Erode Weather 13 February 2025: நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.83°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

தங்கம் விலை மீண்டும் உயர்வு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தங்கம் விலை மீண்டும் உயர்வு!

தங்கம் விலை மீண்டும் உயர்வு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In