மஹாராஷ்டிரா: நாக்பூர் – மும்பை விரைவுச் சாலையில் நந்தகான் கந்தேஷ்வர் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் ஓட்டை விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . வீடியோவை பகிர்ந்து, கட்டுமானப் பணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
பிரதமர் மோடியால் 2022 டிசம்பரில் இச்சாலை திறந்து வைக்கப்பட்டது. 701 கி.மீ. நீளம் கொண்ட இச்சாலைக்கு சுமார் ₹55,000 கோடி செலவு செய்யப்பட்டது. அடிக்கடி இந்த விரைவுச் சாலையில் விபத்துகள் ஏற்படுவது சமீபத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தற்போது மேம்பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மும்பை விரைவுச் சாலையில் நந்தகான் கந்தேஷ்வர் பகுதியில் அமைந்துள்ள 701 கிமீ அதிவேக நெடுஞ்சாலையானது சுமார் 55,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலைகளில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் அமராவதி, அவுரங்காபாத் மற்றும் நாசிக் ஆகிய முக்கிய நகர்ப்புற பகுதிகள் வழியாக செல்கிறது. இந்த விரைவுச் சாலையானது அருகிலுள்ள 14 மாவட்டங்களின் இணைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.
இதனால் விதர்பா, மராத்வாடா மற்றும் வடக்கு மகாராஷ்டிரா பகுதிகள் உட்பட மாநிலத்தின் சுமார் 24 மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சம்ருத்தி மகாமார்க் டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ்வே, ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை மற்றும் அஜந்தா எல்லோரா குகைகள், ஷீரடி, வெருல், லோனார் போன்ற சுற்றுலா இடங்களுடன் இணைக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் நாக்பூர் – மும்பை விரைவுச் சாலையில் நந்தகான் கந்தேஷ்வர் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் ஓட்டை விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோவை பகிர்ந்து, கட்டுமானப் பணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். பிரதமர் மோடியால் 2022 டிசம்பரில் இச்சாலை திறந்து வைக்கப்பட்டது. 701 கி.மீ. நீளம் கொண்ட இச்சாலைக்கு சுமார் ரூ.55,000 கோடி செலவு செய்யப்பட்டது. அடிக்கடி இந்த விரைவுச் சாலையில் விபத்துகள் ஏற்படுவது சமீபத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தற்போது மேம்பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
