“அண்ணாமலை தகுதிக்கு மீறி பேசுகிறார் என்கிறீர்கள்… அப்படி என்ன பேசிவிட்டார்?”
“பிறந்த ஊரில் கூட மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர், முதலமைச்சர் கைது செய்யப்படுவார் எனச் சொல்வது அபத்தமாக இருக்கிறது. அவர் என்ன சி.பி.ஐ இயக்குநரா? அமலாக்கத்துறை இயக்குநரா? பா.ஜ.க-வின் மாநில தலைவர்தானே அண்ணாமலை? அரவக்குறிச்சியில் ஓட்டுக்கு 1,000 ரூபாய் கொடுத்தாரா இல்லையா? என சவால் விட்டு கேட்கிறேன். ஊழல் நிறைந்த நபர், அவர் அப்படிப் பேசியது கண்டனத்திற்குரியது”
“தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான மோதல்போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே?”
“இது ஆர்.எஸ்.எஸ்-ஸின் திட்டமிட்ட சதி. எங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் ஆள்கிறதோ அங்கெல்லாம் ஆளுநர்களை வைத்து, ஆர்.எஸ்.எஸ் இத்தகைய அரசியல்களை செய்துகொண்டிருக்கிறது. பா.ஜ.க தலைவராக இருப்பவர் செய்ய வேண்டிய பணிகளை, கொள்கை அளவில் ஆளுநர் செய்கிறார். ஆளுநர் மாளிகையை பா.ஜ.க அலுவலகமாக மாற்றிச் செய்யும் இம்முயற்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள்.”

