இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
“தங்க நகைக் கடன்களுக்கான புதிய விதிமுறைகள் குறித்து மத்திய நிதியமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்திற்கு நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சி.
விவசாயிகள், தினசரி வேலை செய்து வருமானம் ஈட்டுபவர்கள் என ரூ. 2 லட்சத்திற்கும் கீழ் கடன் பெறுபவர்களின் நலன்களைப் சரியான நேரத்தில் பாதுகாப்பதும் கடன் கிடைப்பதை உறுதி செய்வதும் எங்களின் நிலையான கோரிக்கையாக இருந்து வருகிறது.
தற்போது விதிகளை தளர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்தாலும், இதுபோன்ற அறிவிப்புகள் ஏழை மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இனி இதுபோன்ற விதிகள், கொள்கைகளை மாநிலங்களுடன் முன்கூட்டியே கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
