Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

24 வருட போராட்டம்; கருணைக்கொலை செய்யப்படப்போகும் முதல் கர்நாடகா பெண்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 12, 2025
in அரசியல் செய்திகள்
0
24 வருட போராட்டம்; கருணைக்கொலை செய்யப்படப்போகும் முதல் கர்நாடகா பெண்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



2018ல் உச்சநீதிமன்றம் விசாரித்த ஒரு வழக்கில் ‘குணப்படுத்தவே முடியாத, தீராத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படும் நோயாளிகள் கண்ணியமாக இறப்பதற்கான உரிமை உள்ளது. சட்டப்பிரிவு 21ன் கீழ் இந்த உரிமை உள்ளது’ என உத்தரவிட்டது.

இதேபோல், கடந்த 2023ல் இது தொடர்பாக ஒரு வழக்கு விசாரணையில், கண்ணியமான மரணத்துக்கான உரிமை தொடர்பான விஷயத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்படி மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை அடிப்படையாக வைத்து, கருணைக்கொலைக்கு கர்நாடக அரசின் சுகாதாரத்துறை கடந்த ஜனவரி 30ம் தேதி அனுமதி அளித்தது.

இந்த அனுமதியைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரான எச்.பி. கரிபசம்மா (85), கருணைக்கொலை செய்யப்பட இருக்கிறார்.

கர்நாடகா மாநிலம், தாவணகெரே பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தனது கணவருடன் கரிபசம்மா வசித்துவருகிறார். இவர் முதுகுத் தண்டுவடம் பிரச்சனையின் காரணமாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன்னல்களை சந்தித்துவருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு புற்றுநோயும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதுகுத் தண்டுவடம் பிரச்சினை காரணமாக அசைய முடியாமல் இருக்கும் கரிபசம்மா, கடந்த 24 வருடங்களாக கண்ணியமான மரண உரிமைக்காக போராடி வருகிறார். இது தொடர்பாக அவர் முதலமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் உச்சநீதிமன்றம் என பல்வேறு தரப்பிலும் மனுக்கள் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், கர்நாடகா அரசு கடந்த ஜனவரி 30ம் தேதி கண்ணியமான மரண உரிமைக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இவர் மரணிக்கப்பட இருக்கிறார். கண்ணியமான மரண உரிமையில் கர்நாடகா அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், ‘உயிர் காக்கும் கருவியுடன் சிகிச்சை பெறுவோரும், உயிர் காக்கும் சிகிச்சைக்கும் ஒத்துழைக்காதவர்களுக்கு மட்டுமே கண்ணியமான மரண உரிமை அடிப்படையில் மரணிக்க அனுமதிக்கப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

குழந்தைகள் அற்ற கண்ணியமான மரண உரிமை அடிப்படையில் மரணிக்க இருக்கும் கரிபசம்மா, “இந்த உரிமையைப் பெற பலர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். ஆனால் நான் கர்நாடகாவில் முதல் நபராக இருக்க விரும்புகிறேன்.

நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான முதியோர் நோய்களை எதிர்கொள்கின்றனர். என்னைப் போலவே, அவர்களும் ஒரு கண்ணியமான மரணம் இல்லாமல் துன்பங்களைத் அனுபவிக்கிறார்கள். இதைத் தீர்ப்பதற்கு ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நான் வாதிடத் தொடங்கியபோது, ​​அது பரவலான அதிர்ச்சியை சந்தித்தது. மெல்ல மெல்ல என் குடும்பத்தாரும், உறவினர்களும் என்னைவிட்டு ஒதுங்கினர்” எனத் தெரிவித்தார்.

கண்ணியமான மரணத்திற்கான போராட்டத்தில் இவர், தனது குடும்ப உறவுகள் மட்டுமின்றி, கடந்த 20 வருடங்களில் அவரது வீடு, நிதி உள்ளிட்ட அனைத்தையும் இழந்திருக்கிறார். இறுதியாக அவரது சேமிப்பில் இருந்த ரூ. 6 லட்சம் பணத்தையும் அவர், எல்லை பாதுகாப்பு படைக்கு கொடுத்துவிட்டார்.

First Published :

February 12, 2025 4:08 PM IST



.

Previous Post

C. V. Shanmugam : தேர்தல் ஆணையத்திற்கு குமாஸ்தா வேலை தான்.. மனு அளித்தவர்கள் அதிமுகவினரே அல்ல

Next Post

இந்திய எல்லையில் 1.1 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்திய எல்லையில் 1.1 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

இந்திய எல்லையில் 1.1 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In