Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமைதியாக முடிவடைந்த இறுதிகட்ட வாக்குப்பதிவு… நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 3, 2024
in அரசியல் செய்திகள்
0
அமைதியாக முடிவடைந்த இறுதிகட்ட வாக்குப்பதிவு… நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மக்களவைத் தேர்தலில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் அமைதியாக முடிவடைந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை மறுதினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

மக்களவைத் தேர்தலில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், சண்டிகர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

விளம்பரம்

இமாச்சலப்பிரதேச மாநிலம், பிலாஸ்பூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தனது மனைவி மல்லிகா நட்டாவுடன் முதல் நபராக சென்று வாக்களித்தார்.

இதையும் படிக்க:
மக்களவைத் தேர்தலில் வெல்லப் போவது யார்? – மாநிலம் வாரியாக கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ!

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது மனைவி ராப்ரி தேவி, மகள் ரோஷிணி ஆச்சார்யாவுடன் சென்று பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

விளம்பரம்

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக, வாக்குப்பதிவு மையத்தில் கூடியிருந்த மக்களை அவர் சந்தித்துப் பேசினார்.

பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்நாத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஜனநாயகக் கடமை ஆற்றினார்.

இமாச்சலப்பிரதேச மாநிலம், மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத் வாக்கு செலுத்தினார். பாலிவுட் நடிகர் ஆயுஷ்மன் குரானா, சண்டிகரில் வாக்களித்தார்.

விளம்பரம்

இதையும் படிக்க: கரையைக் கடந்த ரெமல்.. அடுத்த புயலின் பெயர் இதுதான்..!

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், நடிகையுமான நுஸ்ரத் ஜஹான் கொல்கத்தாவில் ஜனநாயகக் கடமையை ஆற்றினார். அதேபோல திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான மிமி சக்ரவர்த்தி கொல்கத்தாவில் வாக்களித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்பஜன் சிங், பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

மேற்குவங்க மாநிலத்தின் ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பங்கர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆதரவாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை சிலர் அப்பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் வீசினர். அப்பகுதியில் இருந்து சில நாட்டு வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்தினர்.

விளம்பரம்

மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை மறுதினம் எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.

.



.

Previous Post

Election Results 2024:’நாளை ரிசல்ட்! உஷாரய்யா உஷாரு’ ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை! தொண்டர்களுக்கு கூறும் அறிவுரை இதுதான்!

Next Post

கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In