Last Updated:
அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
அனைவருக்கும் பொதுவான வகையில் ஓய்வூதியத்தை திட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை யுனிவர்சல் பென்ஷன் ஸ்கீம் (யூபிஎஸ்) என்று அழைக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் அமைப்புசாரா மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் அனைவரும் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. தற்போது கட்டிடத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் அரசுடைய சேமிப்பு திட்டங்களில் இடம் பெறாமல் இருக்கின்றனர்.
இதேபோன்று சம்பளம் வாங்குவோர் மற்றும் சுய தொழில் செய்வோரையும் இணைத்து புதிய ஓய்வூதிய திட்டம் உருவாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஓய்வூதிய திட்டத்தில் இடம்பெற்றுள்ள இ.பி.எஃப். உள்ளிட்டவை புதிய ஓய்வூதிய திட்டத்திலும் நடைபெற இருக்கும் என்று நடைமுறைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை முதலீடு செய்வதற்கு 60 வயது கடந்த பின்னர் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று பிரதான் மந்திரி ஸ்ரீராம் யோகி மந்தன் யோஜனா திட்டம் மூலமாக தெருவோர கடைகளை நடத்துவோர், வீட்டு வேலைகள் செய்வோர் மற்றும் தொழிலாளர்களுக்கு பயன்பெற்று வருகின்றனர்.
இதே போன்று விவசாயிகளுக்காக பிரதான் மந்திரி கிசான் மந்தன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டமானது 60 வயதை கடந்த பயனாளிகளுக்கு மாதம் ரூ. 3000 வரையில் ஓய்வூதியம் வழங்க வழிவகை செய்கிறது.
February 26, 2025 5:22 PM IST

