Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சாதிப்பெயரைக் குறிப்பிட்டு விவசாயிகளுக்கு சம்மன்… விஸ்வரூப பிரச்சினையால் பின்வாங்கிய அமலாக்கத்துறை.!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 4, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சாதிப்பெயரைக் குறிப்பிட்டு விவசாயிகளுக்கு சம்மன்… விஸ்வரூப பிரச்சினையால் பின்வாங்கிய அமலாக்கத்துறை.!
53
SHARES
85
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சேலம் விவசாயிகளை சட்டவிரோத பணப்பரிவர்த்தனைக்காக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்திய சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த பட்டியலின விவசாயிகளான சகோதரர்கள் கண்ணையன், கிருஷ்ணன். இவர்களுக்குச் சொந்தமாக 6.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயல்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஜூலை 5-ம் தேதி சகோதரர்கள் இருவரும் சென்னைக்கு வரவேண்டும் என அவர்களது சாதிப் பெயரை குறிப்பிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து பதற்றமடைந்த சகோதரர்கள் இருவரும், தங்களது ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகங்களை எடுத்துக் கொண்டு, சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆஜராகினர். இதனிடையே இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், இருவருக்கும் சொந்தமான இந்த 6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க பாஜக நிர்வாகி ஒருவர் முயற்சி செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

விவசாயிகள்

விவசாயிகள்

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி தமிழக காவல்துறை இயக்குநரிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் சாதிப் பெயரை குறிப்பிட்டு, வங்கிக் கணக்கில் 500 ரூபாய் மட்டுமே வைத்திருக்கும் விவசாய சகோதரர்களை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்தது குறித்த விசாரணைக்காக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

எழுதப் படிக்கத் தெரியாத வயதான விவசாயிகள் 2 பேரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டி துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் மீதான வழக்கை ரத்து செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post

தமிழ் எழுத்துக்களால் உருவான 20 அடி உயர திருவள்ளுவர் சிலை.. நாளை முதல்வர் திறப்பு.

Next Post

1500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
1500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை.!

1500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In