Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுபான கொள்கை வழக்கு: கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 15, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
மதுபான கொள்கை வழக்கு: கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை..
40
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

headphone

புதுடில்லி,: புதுடில்லியில் நடந்த மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில், மதுபானக் கொள்கை மாற்றப்பட்டது.

இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் மதுபான தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் புதுடில்லி ஆட்சியாளர்களிடையே, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக, அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், கலால் துறையை கவனித்து வந்த புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது.

இந்த முறைகேட்டில் தெலங்கானா முன்னாள் முதல்வரும், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.இந்நிலையில் புதுடில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்து உள்ள அறிக்கையில், சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. கவிதா, தெலுங்கானா மேல்சபை உறுப்பினராகவும் உள்ளார்.

மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக கவிதாவிடம் அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியுள்ளது.இதையடுத்து இந்த வழக்கில் கவிதாவை இன்று

(15-ம் தேதி) அமலாக்கத்துறை கைது செய்தது. கவிதாவை டில்லி அமலாக்கத்துறை தலைமை அலுவலகம் கொண்டு செல்ல அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

.

Previous Post

மாணவர்களின் வாக்காளர் அட்டை போன்ற தனிநபர் தரவுகளை கேட்ட ஆளுநர் :மாணவர்கள் கடும் எதிர்ப்பு..

Next Post

வட சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவு: யானைகவுனி புதிய மேம்பாலத்தை த.மாறன் திறந்து வைத்தார்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வட சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவு: யானைகவுனி புதிய மேம்பாலத்தை த.மாறன் திறந்து வைத்தார்..

வட சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவு: யானைகவுனி புதிய மேம்பாலத்தை த.மாறன் திறந்து வைத்தார்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இது போன்ற கைதுகள் தொடரட்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In