Last Updated:
கர்நாடகாவில், திருமண வரவேற்பில் குடிநீர் தகராறால் மணமக்கள் மனோஜ் குமார் மற்றும் அனிதா திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட குடிநீர் தகராறால் திருமணமே நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே ஜகளூரில் வசிப்பவர் மனோஜ் குமார். துமகூரு பகுதியைச் சேர்ந்தவர் அனிதா. பொறியியல் பட்டதாரிகளான இவர்களுக்கு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயமானது. சித்ரதுர்கா, ஹரியூரில் உள்ள மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. நேற்று முன்தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தபோது, சிலர் தாமதமாக வந்துள்ளனர். அவர்கள் உணவு சாப்பிட அமர்ந்த நிலையில், கேட்டரிங் ஊழியர்கள், விருந்தினர்களுக்கு குடிநீர் கொடுக்கவில்லை. இது சலசலப்பாகி, இறுதியில் மணமகன், மணமகள் குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், இரவு துவங்கிய தகராறு, நேற்று காலையும் நீடிக்க, உறவினர்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும் பிரச்சினை சரியாகவில்லை. நேற்று காலை, 10:30 மணிக்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால், மணமகள் அனிதா, திடீரென தனக்கு இந்த திருமணமே வேண்டாம் எனக் கூறினார்.
அவரை சமாதானம் செய்ய உறவினர்கள் செய்த முயற்சி பலன் அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில், மணமகன் மனோஜ் குமாரும் திருமணம் வேண்டாம் எனக்கூறியதால், கடைசி நேரத்தில் திருமணம் நின்று போனது. இதனால், திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினர். திருமண விருந்தில் குடிப்பதற்கு வைக்கப்பட்டும் தண்ணீர் பிரச்சினையை திருமணத்தை நிறுத்தும் அளவிற்கு சண்டையாக மாறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
March 18, 2025 6:19 PM IST
இரவு முதல் காலை வரை தொடர்ந்த தகராறு.. தண்ணீர் பாட்டிலால் நின்ற திருமணம்.. கர்நாடகாவில் பரபரப்பு சம்பவம்!

