Last Updated:
சட்டவிரோத இடம்பெயர்வு எவ்வாறு நடந்தது என்பதை அரசாங்கம் கண்டுபிடித்து வருவதாகவும், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டறியப்பட்டால், தங்கள் நாட்டினரைத் திரும்ப அழைத்துச் செல்வது அனைத்து நாடுகளின் கடமையாகும் எனவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்களை நாடு கடத்துவது கடந்த காலங்களில் இருந்து மாற்றமின்றி தொடரும் நிகழ்வாக உள்ளதாக மாநிலங்களவையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், 2009ஆம் ஆண்டு முதல் இது போன்ற நாடு கடத்தல்களின் பட்டியலையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மேலும், சட்டவிரோத இடம்பெயர்வுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார். சட்டவிரோத இடம்பெயர்வு எவ்வாறு நடந்தது என்பதை அரசாங்கம் கண்டுபிடித்து வருவதாகவும், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டறியப்பட்டால், தங்கள் நாட்டினரைத் திரும்ப அழைத்துச் செல்வது அனைத்து நாடுகளின் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக டொனால்ட் டிரம்ப் அரசாங்கத்தால் நாடு கடத்தப்பட்ட 104 சட்டவிரோத இந்தியர்களை அழைத்து வந்த அமெரிக்க இராணுவ விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. அவர்களில், தலா 33 பேர் ஹரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 30 பேர் பஞ்சாப், தலா மூன்று பேர் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், மூன்று பேர் சண்டிகரைச் சேர்ந்தவர்கள்.
திரும்பி வருபவர்கள் யாரும் மோசமாக நடத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக அமெரிக்காவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதை EAM உறுதி செய்துள்ளது. திரும்பி வருபவர்களை எந்த வகையிலும் தவறாக நடத்தக்கூடாது என்பதை உறுதி செய்ய நாங்கள் அமெரிக்க அரசாங்கத்தை ஈடுபடுத்துகிறோம் எனவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ChatGPT, DeepSeek போன்றவற்றை இங்கெல்லாம் பயன்படுத்த வேண்டாம்… எச்சரித்த மத்திய அரசு!
முன்னதாக, மக்களவை இன்று கடும் அமளியுடன் தொடங்கிய நிலையில், அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். அரசு அவர்களின் கோரிக்கைகளை தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளதாக உறுப்பினர்களிடம் சபாநாயகர் ஓம் பிர்லா உறுதியுடன் தெரிவித்தார்.
February 06, 2025 5:27 PM IST

