Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“இந்திய அரசியலமைப்பே உயர்ந்தது..” – உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 19, 2025
in அரசியல் செய்திகள்
0
“இந்திய அரசியலமைப்பே உயர்ந்தது..” – உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 18, 2025 5:20 PM IST

உச்சநீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் 14 கேள்விகள் எழுப்பி விளக்கம் கேட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், “இந்திய அரசியலமைப்பே உயர்ந்தது” எனப் பேசியுள்ளார்.

News18News18
News18

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடந்த வாரம் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் இன்று பங்கேற்றுப் பேசினார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவில் பதவியேற்ற உடனேயே, பாபாசாகேப் அம்பேத்கருக்கு எனது மரியாதையைச் செலுத்தினேன். பாபாசாகேப் அம்பேத்கரின் பங்களிப்பின் காரணமாகவே நமது நாடு இன்று சுதந்திரத்தை அனுபவிக்கிறது. அவரது ஆசிகளைப் பெற நான் இங்கு வந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து விழாவில் பேசிய அவர், “நீதிமன்றமோ, நிர்வாகமோ மற்றும் நாடாளுமன்றமோ நாட்டில் உயர்ந்தவை கிடையாது. நாட்டில் மிகவும் உயர்ந்தது இந்திய அரசியலமைப்பு மட்டுமே. மேலே குறிப்பிட்ட மூன்றும் அரசியலமைப்பின் அடிப்படையில் பணியாற்ற வேண்டும். மேலும் அரசியலமைப்பின் அனைத்து உறுப்புகளும் ஒன்றுக்கொன்று உரிய மரியாதையை வழங்கி, பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும்” எனப் பேசினார்.

முன்னதாக ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கால நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக விளக்கம் கோரி 14 கேள்விகளை இந்திய உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தச் சூழலில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, “நாட்டில் இந்திய அரசியலமைப்பே உயர்ந்தது” எனப் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.



.

Previous Post

திருச்சபையின் புதிய மேய்ப்பா்!

Next Post

பிறநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிறநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?

பிறநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In