Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

முதலமைச்சரை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்காமல் வந்த காங்கிரஸ் MLAக்கள்! டீ, சுண்டல் தான் மிச்சம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 22, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
முதலமைச்சரை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்காமல் வந்த காங்கிரஸ் MLAக்கள்! டீ, சுண்டல் தான் மிச்சம்!
32
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினை அப்பாயிண்ட்மெண்ட் வாங்காமல் பார்க்க வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், டீயும், சுண்டலும் மட்டும் சாப்பிட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிய நிகழ்வு நடந்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க வருபவர்கள் முன் கூட்டியே முதல் நாளோ அல்லது சந்திக்க வருவதற்கு முன்னர் 2 மணி நேரத்துக்கு முன்னரோ முறைப்படி அப்பாயிண்ட்மெண்ட் கேட்பது வழக்கம். அப்போது தான் தன்னை யார் யார் சந்திக்க வருகிறார்கள், யார் யாருக்கு என்னென்ன நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பது முதலமைச்சருக்கும் தெரியும்.

Congress MLAs led by KS Alagiri came to see CM Stalin without proper appointment and returned disappointed after having tea and sundal

ஆனால் இன்று காலை 10.30 மணியளவில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சரை பார்க்க தலைமைச் செயலகம் வந்து ஏமாற்றத்துடன் புறப்பட்டுச் சென்றனர். காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகமே வரவில்லை. முகாம் அலுவலகத்தில் இருந்தவாறு நிர்வாகப்பணிகளை மேற்கொண்டார். முதல்வர் தலைமைச் செயலகம் வருகிறாரா இல்லையா என்ற தகவலை கூட விசாரிக்காமல் அவரை பார்க்க புறப்பட்டு வந்தார் கே.எஸ்.அழகிரி.

மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரிடம் வழங்குவதற்காக தான் அழகிரியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வந்திருந்தனர். காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை முதலமைச்சர் ஸ்டாலின் வருவார் எனக் காத்திருந்த கே.எஸ்.அழகிரி, அதன்பிறகு முதல்வர் வர வாய்ப்பில்லை என்ற தகவலை அதிகாரிகள் மூலம் உறுதி செய்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இதனிடையே முதல்வர் வருகைக்காக தலைமைச் செயலகத்தில் உள்ள காங்கிரஸ் சட்டசபைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை அறையில் காத்திருந்த கே.எஸ்.அழகிரிக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு டீயும், சுண்டலும் வழங்கப்பட்டது. அதனை சாப்பிட்டுவிட்டு அனைவரும் தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இந்த தகவல் முதல்வருக்கும் தாமதமாக தான் தெரிந்திருக்கிறது. மற்றொரு நாள் முதல்வர் தரப்பில் கே.எஸ்.அழகிரிக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்..!

Next Post

மன்சூர் அலிகானுக்கு ₹1 லட்சம் அபராதம்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மன்சூர் அலிகானுக்கு ₹1 லட்சம் அபராதம்..!

மன்சூர் அலிகானுக்கு ₹1 லட்சம் அபராதம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In