கூகுள் மேப்பில் தவறான ரூட்டை காட்டியதால் சுற்றுலா பயணிகள் கால்வாய்க்குள் காரை செலுத்திய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
ஐதராபாத்தில் இருந்து 4 பேர் கொண்ட குழு, கேரள மாநிலம் கோட்டயம் அருகே குரப்பன்தாரா என்ற பகுதியில் சனிக்கிழமை அதிகாலை காரில் சென்றுகொண்டிருந்தனர். ஆலப்புழா நோக்கி அவர்கள் சென்ற போது கூகுள் மேப்பில் தவறான பாதையை மேப் காட்டியதாக கூறப்படுகிறது. கூகுள் மேப்பின் வழியை பின்பற்றிய ஓட்டுநர் காரை தண்ணீரில் மூழ்கடித்தார்.
இந்த விபத்தில் காரில் இருந்த நான்கு பேரும் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர். கால்வாய்க்குள் கார் சென்றது பற்றி பேசிய காரை ஓட்டிய நபர், மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே கார் ஓட்டியதாகவும், ஜன்னல் வழியாக 4 பேரும் வெளியேறியதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க:
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 12ஆம் வகுப்பு மாணவி அசத்தல்!
கார் தண்ணீரில் மூழ்கிய பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக விபத்து நடப்பது தொடர்கதையாகியுள்ளதாகவும், வழிகாட்டி பலகைகள் பெரிதாக வைக்க வேண்டும் என்றும் அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
.
- First Published :
