சென்னை: இன்று TNPSC யால் அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசுகையில் “கடந்த வாரம் நான் அறிவிப்பு வெளியிட்டேன். இறக்கும் முன்பு உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படும் என்று கூறினேன். தேனி மாவட்டம் சின்னமனூரில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டது.
அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. வடிவேல் அவர்களின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது உடல் உறுப்பு தானம் பற்றிய மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். மக்கள் சேவையை கருத்தில் கொண்டு தன்னலம் கருதாது பணியாற்ற வேண்டும்.
ஒரு கருவியோ,இயந்திரமோ சிறப்பாக செயல்பட அதில் உள்ள ஒவ்வொரு கருவியும் சிறப்பாக செயல்பட வேண்டும். அது போலத்தான் அரசு என்கிற இந்த மாபெரும் இயந்திரம் சிறப்பாக செயல்பட அரசு ஊழியர்கள் சீரிய முறையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் நீங்கள் முழு ஈடுபாட்டோடு பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார் முதல்வர்.


Good initiative by CM