Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டம்: தொடக்கிவைத்த முதல்வர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 4, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டம்: தொடக்கிவைத்த முதல்வர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1,383  கோடி மதிப்பீட்டிலான 79 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக மருத்துவ உபகரணங்கள் வழங்கி,
29 முடிவுற்றப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று (4.12.2024) சென்னை, வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 1,383 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 79 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக மருத்துவ உபகரணங்கள் வழங்கி,
29 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார். 

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வால்டாக்ஸ் சாலையில் 129.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700 புதிய குடியிருப்புகள் கட்டுதல், ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் 143.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 776 புதிய குடியிருப்புகள் கட்டுதல், கொன்னூர், திருவொற்றியூர், பெரம்பூர் சென்ட்ரல் நிழற்சாலை, கொண்டித்தோப்பு, திரு.வி.க. நகர் – சந்திரயோகி சமாதி சாலை, புழல்-விளாங்காடுபாக்கம் ஆகிய இடங்களில் 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய  சமுதாயக்கூடங்கள் கட்டுதல்,  21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தண்டையார்பேட்டையில் விளையாட்டு அரங்கம், வில்லிவாக்கம்-அகத்தியர் நகர் மற்றும் ராயபுரம் – மூலகொத்தளத்தில் விளையாட்டு திடல்கள் அமைத்தல், கொளத்தூர் – ஜவஹர் நகர் மற்றும் பெரியார் நகர் நூலகங்களை 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்துதல், கொளத்தூரில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் சேவை மையம் கட்டுதல், கொளத்தூர் – நேர்மை நகரில் 36.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் கட்டுதல், என 421 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 15 புதிய திட்டப்பணிகள்;

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மாதவரம் பேருந்து முனையம் மற்றும் விநாயகபுரம் பேருந்து நிலையத்தை மேம்படுத்துதல், எண்ணூர், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, பேசின் பாலம், பெரம்பூர், புரசைவாக்கம், அயனாவரம் ஆகிய இடங்களிலுள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டுதல், மாத்தூர், கொடுங்கையூர், இராயபுரம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை – சோலையப்பன் தெரு, பெரியதம்பி தெரு மற்றும் வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் – கத்படா பிரதான சாலை மற்றும் சண்முகம் தெரு, செனாய் நகர் ஆகிய இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள், வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய இடங்களில் விளையாட்டு மைதானங்கள், வில்லிவாக்கத்தில் மறுவாழ்வு மையம் அமைத்தல், கொடுங்கையூரில் சமுதாயக்கூடம், சேத்பட்டு  சுற்றுச்சூழல் பூங்காவை மேம்படுத்துதல், கத்திவாக்கம் மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம், இராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள், காசிமேடு, கொளத்தூர், பல்லவன் சாலை ஆகிய இடங்களில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிகள்,  குளங்களை சீரமைக்கும் பணிகள், மண்டலம் 1 முதல் 8 வரையில் உள்ள மின்மாற்றிகளை சுற்றி அழகுபடுத்தும் வகையிலும், பாதுகாப்பு நோக்கிலும் அமைக்கப்பட்டுள்ள பார்வை மறைப்பான்கள், பெரம்பூரில் இறைச்சிக்கூடம் அமைக்கும் பணி, கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனையை மேம்படுத்துதல், என 204 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 45 புதிய திட்டப்பணிகள்;



.

Previous Post

விடியா மூஞ்சிகளுக்கு விடியவே விடியாது : நக்கலாக பேசிய முதல்வர்..

Next Post

DMK: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புது பாலம், காரணம் ஏற்புடையதா? Imperfect Show

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
DMK: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புது பாலம், காரணம் ஏற்புடையதா? Imperfect Show

DMK: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புது பாலம், காரணம் ஏற்புடையதா? Imperfect Show

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In