Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வேளாண் துறையில் 151 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 2, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வேளாண் துறையில் 151 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வெள்ளிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

வேளாண்மைத் துறைக்கு சிறப்பிடம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதோடு, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை – உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டு, வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம், விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம், பயிர் காப்பீட்டுத் திட்டம் போன்ற பல்வேறு சீரிய திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அதுமட்டுமின்றி, சுற்றுச்சுழல் மற்றும் பொதுநலன் கருதி இயற்கை வேளாண்மையை ஊக்குவித்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தோட்டக்கலைப் பயிர்களில் உயிர்ம வேளாண்மையை ஊக்குவிக்க இடுபொருள் மானியம், இயற்கை வேளாண் இடுபொருட்களை உற்பத்தி செய்யும் அலகுகள் அமைத்திட குழுக்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் மானியம், நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மைக்கான சிறப்புத் திட்டம், வட்டாரத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் 385 வட்டாரங்களில் உயிர்ம வேளாண்மைக்கான செயல்விளக்கத்திடல்கள் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவை தவிர இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக பூமாலை வணிக வளாகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் வசதிகள் ஏற்படுத்தித் தருதல், இயற்கை வேளாண்மை மேற்கொள்ள ஊக்கத்தொகை வழங்குதல், இயற்கை வேளாண்மை சான்றிதழுக்கான பதிவுக்கட்டணத்திற்கு முழு விலக்கு அளித்தல், இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் 2025-26ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை(மே.2) நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதினையும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

மூன்று நபர்களுக்கு நம்மாழ்வார் விருது

2023-2024-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை-உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் அவர்கள் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும், ஊக்குவிக்கும் மற்றும் பிற உயிர்ம விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் இயற்கை வேளாண்மையை விவசாயிகளிடம் பெருமளவில் கொண்டு சேர்த்த “நம்மாழ்வார்” அவர்களின் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அவ்வகையில் 2024-ஆம் ஆண்டு மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, 2025-ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது, உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த க.சம்பத்குமார் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம் மற்றும் ரூ.10,000 மதிப்பிலான பதக்கமும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த த.ஜெகதீஸ் இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம் பரிசுத் தொகை மற்றும் ரூ.7,000 மதிப்பிலான பதக்கமும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வே.காளிதாஸ் மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5,000 மதிப்பிலான பதக்கமும் முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.



.

Previous Post

மாத தொடக்கத்திலேயே உயர்த்தப்பட்ட பால் விலை.. அதிர்ச்சியில் மக்கள்!

Next Post

சிபிஎஸ்சி பள்ளிகளில் இனி கட்டாய தேர்ச்சி கிடையாது! பெற்றோர்கள் கேள்வி கேட்க வேண்டும்! அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிபிஎஸ்சி பள்ளிகளில் இனி கட்டாய தேர்ச்சி கிடையாது! பெற்றோர்கள் கேள்வி கேட்க வேண்டும்! அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை!

சிபிஎஸ்சி பள்ளிகளில் இனி கட்டாய தேர்ச்சி கிடையாது! பெற்றோர்கள் கேள்வி கேட்க வேண்டும்! அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In