Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மத்திய அரசு இனி தன்னிச்சையாக யாரை வேண்டுமானாலும் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கலாம்..! மசோதா இன்று தாக்கல்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 12, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மத்திய அரசு இனி தன்னிச்சையாக யாரை வேண்டுமானாலும் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கலாம்..! மசோதா இன்று தாக்கல்..!
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லி; தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் விதிகளில் மாற்றம் செய்யும் புதிய சட்ட மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய போகிறது. சர்ச்சைக்குரியதாக விமர்சிக்கப்படும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி இடம்பெற மாட்டார்.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல்ஆணையர்கள் மத்திய அமைச்சரவையின் பரிந்துரை அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவது இந்தியாவில் வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் என்பது மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 Government move amendment to bring Chief Election Commissioner, Election Commissions on par with SC judges

இந்த மனுக்களை 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இதன்படி, மத்திய அரசு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அதுவரை, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி ஆகிய 3 பேர் அடங்கிய குழுதான் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில், 1) பிரதமர்2) எதிர்க்கட்சித் தலைவர் 3) இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் இருக்க மட்டுமே இருக்க முடியும் என்கிற நிலை உள்ளது.

இந்த சூழலில்தான் இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான முக்கிய சட்டத்திருத்ததை இன்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் பதவிகளைத் தக்கவைக்க மசோதாவில் திருத்தம் கொண்டுவருகிறது.

புதிய சட்டத் திருத்ததின் படி, குழுவில் இருப்பவர்கள், 1) பிரதமர் 2) எதிர்க்கட்சித் தலைவர், மக்களவை3) பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை அமைச்சர் (தலைமை நீதிபதிக்கு பதிலாக) அதாவது மொத்தம் உள்ள மூன்று ஓட்டில் பிரதமர் மற்றும் பிரதமர் சார்பாக அமைச்சர் உள்ளதால், பிரதமரே அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை தீர்மானிக்கும் நிலை உருவாகும். இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால், தேர்தல் ஆணைய நியமனத்தில் நீதிமன்றங்களின் தலையீடுக்கு இதன் மூலம் கிட்டதட்ட முடிவுக்கு வரும் என்கிறார்கள்.

Previous Post

லஞ்ச வழக்கில் கைதான ED அதிகாரி.. நீதிமன்றத்தின் அதிரடி ஸ்டெப்…

Next Post

மிக்ஜாம் பேரிடரில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள்.. ரூ.4000 ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மிக்ஜாம் பேரிடரில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள்.. ரூ.4000 ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்..

மிக்ஜாம் பேரிடரில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள்.. ரூ.4000 ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In