முதல் முழக்கமே திராவிடமாடல் அரசுதான்
மாநில உரிமைகளைப் பறிப்பதையே மறைமுகக் கொள்கைத் திட்டமாக கொண்டுள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு, தொகுதி மறுசீரமைப்பின் மூலமாக தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைத்திடத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு எதிரான முதல் முழக்கத்தை எழுப்பியிருக்கிறது திராவிட மாடல் அரசு. இது தனிப்பட்ட தி.மு.க.வின் பிரச்சினையல்ல என்பதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து, கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, தமிழ்நாட்டின் உரிமையைத் தக்க வைக்கவும், தென்மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கையைப் பாதுகாத்திடவும் முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
