தமிழக அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்த ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற கொண்டாட்ட விழா வருகிற செப். 25 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் தகவல் தெரிவித்துள்ளார் .
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
“தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளது. நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண், விளையாட்டு சாதனையாளர்கள் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த திட்டத்தில் பங்கேற்று பயன்பெற்றவர்கள் தங்களது அனுபவத்தை விழாவில் பகிர்வார்கள்.