சுந்தரி தொடர் நாயகி கேப்ரியல்லாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் அறியபட்டவர் நடிகை கேப்ரியல்லா.
தொடர்ந்து டிக் டாக்கில் விடியோவில் வெளியிட்டு ரசிகர்களிடையே பிரபலமான இவருக்கு, திரைத்துறையில் வாய்ப்புக் கிடைத்தது. நயன்தாராவின் ஐரா, காஞ்சனா – 3, கபாலி உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சுந்தரி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் கேப்ரியல்லா. சுந்தரி தொடரின் முதல் பாகத்துக்கு மக்கள் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு அண்மையில் நிறைவடைந்தது.
