Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

முஸ்லிம் திருமண சட்டம் ரத்து… அதிரடியாக முடிவெடுத்த அசாம் அரசு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 25, 2024
in Default
0
முஸ்லிம் திருமண சட்டம் ரத்து… அதிரடியாக முடிவெடுத்த அசாம் அரசு!
24
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்காக அசாம் முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935-ஐ ரத்து செய்ய அசாம் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆண் 21 வயதும் பெண் 18 வயதும் நிறைவடையாமல் திருமணம் செய்துகொள்ள முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935 வழிவகுக்கிறது. எனவே அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணங்களை ஒழிக்கும் முக்கிய முன்னெடுப்பாக இச்சட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் திருமணம்

முஸ்லிம் திருமணம்

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்ய இருப்பதாக அசாம் அரசு அறிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்துள்ளார். வரும் பிப்.28 ஆம் தேதி வரை அசாம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அதனால் இது தொடர்பான மசோதா விரைவில் சட்டப்பேரவையில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு மக்களிடம் கருத்துகளையும் கேட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசுக்கு முன்னதாகவே, உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தபட்டது. உத்தராகண்ட் வழியில் பாஜக ஆளும் மாநிலங்களில் குறிப்பாக குஜராத், அசாமில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் சூழல் உருவானது.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா

இந்நிலையில், உத்தராகண்ட் வழியில் அசாம் தற்போது அதற்கான முன்னெடுப்புகளை செய்கிறது. முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்யும் அசாம் அரசின் முடிவு பற்றி அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா மேலும் கூறுகையில், “முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பலமுறை பொது சிவில் சட்டம் பற்றி பேசியிருக்கிறார். அதன் நீட்சியாக ஒரு முக்கியமான முடிவு எட்டப்பட்டுள்ளது. அசாம் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935 ரத்து செய்யப்படுகிறது. இனி முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து அந்தச் சட்டத்தின் கீழ் பதியப்படாது மாறாக சிறப்புத் திருமணங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். இதன் மூலம் குழந்தைத் திருமணங்களும் குறையும். இதுவரை மாநிலத்தில் முஸ்லிம் திருமணங்களைப் பதிவு செய்துவந்த 94 பதிவர்களுக்கும் சிறப்பு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்” என்றார்.

Previous Post

திமுக கூட்டணியில் இணையும் மக்கள் நீதி மய்யம்… பிப்.28ல் வெளியாகிறது அறிவிப்பு?

Next Post

அமைச்சர் ஐ.பெரியசாமியின் விடுதலை ரத்து: மீண்டும் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமைச்சர் ஐ.பெரியசாமியின் விடுதலை ரத்து: மீண்டும் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

அமைச்சர் ஐ.பெரியசாமியின் விடுதலை ரத்து: மீண்டும் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In