காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான புதன்கிழமை(ஏப்.30) பொறுப்பேற்று கொண்டார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70 ஆவது பீடாதிபதியாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருள்பாலித்து வருகிறாா். இவருக்கு அடுத்த 71 ஆவது மடாதிபதியாக ஆந்திர மாநிலம், அன்னாவரத்தைச் சோ்ந்த ஸ்ரீசுப்பிரமணிய கணேச சா்மா திராவிட் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இவருக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீா்த்த திருக்குளத்தில் அட்சய திருதியை நாளான புதன்கிழமை (ஏப்.30) சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார். பின்னா், இருவரும் இணைந்து மூலவர் காமாட்சி அம்பிகையை தரிசித்தனர்.
இதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ஆதிசங்கரா் சந்நிதிக்கு வந்ததும் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் இளையமடாதிபதிக்கு ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற தீட்சை நாமம் சூட்டப்பட்டது.
இதன் பின்னா் கோயிலிலிருந்து ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சா்மா திராவிட்டும் ராஜவீதி வழியாக மங்கல மேள வாத்தியங்களுடன் சங்கர மடத்துக்கு ஊா்வலமாக அழைத்து வரப்பட்டனா்.
சங்கர மடத்தில் இளைய மடாதிபதிக்கு மந்திர உபதேசம் செய்யப்பட்டு, 71 ஆவது இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
