தவெக தலைவர் விஜய்க்கு சீமான் வாழ்த்து
தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு,
தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை நாளை (22-08-2024) அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும்,
என் அன்புத்தம்பி
தளபதி விஜய் அவர்கள்
இலட்சிய… pic.twitter.com/TdcH6Ufg3B— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) August 21, 2024
தவெக தலைவர் விஜய் 10 நிமிட உரை
கட்சி தொடங்கிய பிறகு, கட்சி தொடர்பான முதல் நிகழ்ச்சி என்பதால், இன்றைய கொடி அறிமுக விழாவில், 10 நிமிடங்கள் உரையாற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, கொடியில் இடம்பெறும் வண்ணங்கள் குறித்த விளக்கத்தையும், அது இடம்பெற்றதற்கான காரணத்தையும் விஜய் விளக்கவுள்ளார். கட்சியின் கொள்கைகள் குறித்தும் விஜய் பேசுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தவெக கொடி நிறம் என்ன?
கொடியில் மஞ்சள் மற்றும் அடர் சிவப்பு, பச்சை நிறங்கள் பிரதானமாக இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், பிங்க் மற்றும் நீல நிறங்கள் சின்னம் போன்ற ஏதேனும் ஒரு வடிவில் இடம்பெறலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க கட்சியின் முக்கியமான 300 நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தவெக கொடியை இன்று அறிமுகம் செய்கிறார் விஜய்
சென்னை பனையூரில் இன்று நடைபெறும் விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுக செய்யும் விஜய், கொடி பாடலையும் வெளியிடவுள்ளார்.
இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்
- First Published :
