Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அண்ணாமலைக்கு கமல்ஹாசன் நன்றி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 4, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அண்ணாமலைக்கு கமல்ஹாசன் நன்றி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமரன் திரைப்படத்தை பாராட்டிய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31ஆம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎஃப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. அமரன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘அழுகையை அடக்க முடியவில்லை’ அமரனை வாழ்த்திய ரஜினி!

4 நாட்கள் படத்தின் ஒட்டுமொத்த வசூல் 150 கோடியைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ’அமரன்’ திரைப்படத்தை லண்டனில் பார்த்துவிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த அற்புதமான படத்தை கொடுத்த அமரன் படக்குழுவுக்கு வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார். இதனிடையே அண்ணாமலையின் இந்தப் பதிவுக்கு தயாரிப்பாளர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமரன் திரைப்படம் அவருக்கு ஏற்படுத்திய உணர்வலைகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அமரன் திரைப்படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமரன் படக்குழுவை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!



.

Previous Post

இந்தியாவில் முதன்முதலாக ஏரோடைனமிக் என்ஜின்களை அறிமுகப்படுத்தும் இந்திய ரயில்வே! | Indian railways to launch first converted aerodynamic WAP-5 – what are its features

Next Post

ஹிஜாப் கட்டுப்பாடு: ஈரான் பல்கலைக்கழகத்தில் ஆடைகளை கழற்றி மாணவி போராட்டம் – வெடித்த சர்ச்சை | Protest against Hijab in iran, students protest

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹிஜாப் கட்டுப்பாடு: ஈரான் பல்கலைக்கழகத்தில் ஆடைகளை கழற்றி மாணவி போராட்டம் – வெடித்த சர்ச்சை | Protest against Hijab in iran, students protest

ஹிஜாப் கட்டுப்பாடு: ஈரான் பல்கலைக்கழகத்தில் ஆடைகளை கழற்றி மாணவி போராட்டம் - வெடித்த சர்ச்சை | Protest against Hijab in iran, students protest

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In