தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள கொண்டலூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்காக சுமார் 17.30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, பள்ளிக்கு அருகே உள்ள காலியிடத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இந்த நிலையில் கூடுதல் வகுப்பறை புதிய கட்டடத்துக்கு நடுவே மின்கம்பத்தின் “ஸ்டே ஒயர்’ புதையும்படி பள்ளிக்கட்டட பணிகள் முடிக்கப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

