Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த வழக்கில் தலைமறைவாக இருந்த தெலங்கானா மாநில டிராவல்ஸ் ஏஜென்ட் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 12, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
சென்னை | போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த வழக்கில் தலைமறைவாக இருந்த தெலங்கானா மாநில டிராவல்ஸ் ஏஜென்ட் கைது
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் உதவி இயக்குநர் கடந்த மாதம் 19-ந்தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் மனு அளித்தார். அதில், சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த முகமது ஷேக்இலியாஸ் என்பவர் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற ஆவணங்களை போலியாக தயாரித்து வருவதாக கூறியிருந்தார்.

அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முகமது ஷேக் இலியாசை கடந்த மாதம் 20-ம்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர் விசாரணையில் ஜதராபாத்தை சேர்ந்த டிராவல்ஸ்ஏஜென்ட் அகமது அலிகான் (42) என்பவர்தான் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் தனிப்படை போலீஸார் தலைமறைவாக இருந்த அகமது அலிகானை அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில் அவர், மும்பை மற்றும் ஐதராபாத்தில் கடந்த 8 ஆண்டுகளாக டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருவதும், இதன் மூலம் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி வைக்க சுமார் 150 போலி பாஸ்போர்ட்கள், விசா ஸ்டாம்பிங் செய்து பணம்பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர், அகமது அலிகான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

.

Previous Post

சர்ச்சை நாயகன்! செக்ஸ் பார்டி, வரி ஏய்ப்பில் சிக்கிய இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி காலமானார்

Next Post

Thiruparankundram Crime: திருப்பரங்குன்றம் அருகே ஆடைகள் கலைந்த நிலையில் பெண் சடலம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Thiruparankundram Crime: திருப்பரங்குன்றம் அருகே ஆடைகள் கலைந்த நிலையில் பெண் சடலம்!

Thiruparankundram Crime: திருப்பரங்குன்றம் அருகே ஆடைகள் கலைந்த நிலையில் பெண் சடலம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In